‘இது ரொம்ப கஷ்டமான முடிவுதான்’!.. இன்ஸ்டாகிராமில் ‘சோக’ பதிவு.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த மியா கலிஃபா..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிஃபா, தனது இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் மியா கலிஃபா (Mia Khalifa). இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது நீண்டகால பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதனை அடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் (Robert Sandberg) தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் மியா கலிஃபா அறிவித்திருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் கணவர் ராபர்ட் சாண்ட்பர்க்கை விவாகரத்து செய்துள்ளதாக மியா கலிஃபா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர், ‘கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக எங்களது திருமண உறவை தக்கவைத்துக்கொள்ள நாங்கள் போதுமான முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை.
அதனால், திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். நாங்கள் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிந்தாலும், எங்களது நட்பை தொடர முடிவு செய்துள்ளோம்’ என மியா கலிஃபா பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
