'கரப்பான் பூச்சியால ஒரு மனுசனுக்கு...' 'இப்படியெல்லாம் கூடவா பிரச்சனை வரும்...' - மூணு வருசமா போராடி இப்போ கோர்ட் வரைக்கும் போய்டுச்சு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமென்பொருள் பொறியாளராக இருக்கும் நபர், மத்திய பிரதேசத்தின் போபாலில் வசித்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில் வீடு தேடி அலைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 18 வீடுகளை மாற்றியுள்ளளார். இதற்கு காரணம் அவரின் மனைவிக்கு இருக்கும் பூச்சி பயம்.
![3 years 18 houses replaced Madhya Pradesh by Cockroach 3 years 18 houses replaced Madhya Pradesh by Cockroach](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/3-years-18-houses-replaced-madhya-pradesh-by-cockroach.jpg)
திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து தான் ஒருநாள் சமையலறையில் ஒரு கரப்பான் பூச்சி பார்த்து கத்தி அலறியுள்ளார். பெண்மணி அலறியதை பார்த்து அந்த வீட்டில் இருந்தவர்களே பயந்துள்ளனர்
கரப்பான் பூச்சியை விரட்ட எவ்வளவு தான் முயற்சி செய்தும் சமையலறைக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. அவரின் மனைவியும் சமையலறைக்குள் நுழைய மறுத்து, அவர்கள் ஒரு புதிய வீட்டிற்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன்பின் 2018 ஆம் ஆண்டு வேறொரு வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் இதேபோல் கரப்பான் பூச்சியின் தொல்லையால் அந்த பெண்மணி வேறொரு வீடு மாற வற்புறுத்தியுள்ளார். இதேபோல் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்த ஜோடி 18 வீடுகளை மாற்றிவிட்டோம் என கணவர் கூறுகிறார்.
தன் மனைவியின் மனநிலை குறித்து பல தனியார் மனநல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தார், இருப்பினும், அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்தை எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஒரு கரப்பான் பூச்சியால் கணவர் மனைவிகிடையே ஏற்பட்ட ஒரு விரிசல் விவகாத்து அளவிற்கு சென்றுள்ளா சம்பவம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக பலர் தாங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)