‘எங்கிருந்தாலும் நல்லா இருங்க’...!!! ‘கல்யாணத்திற்குப் பின்னர் தெரிய வந்த விஷயம்'...!! ‘கணவருக்காக, மனைவி எடுத்த துணிகர முடிவு’...!!! 'ஆறுதல் சொல்லும் நெட்டிசன்கள்’...!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 10, 2020 09:15 PM

கல்யாணமான பெண் ஒருவர், தனது கணவர் அவரது காதலியுடன் சேர்த்து வாழ்வதற்காக, எந்தப் பெண்ணும் செய்ய துணியாத காரியத்தை செய்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

woman divorces husband of 3 years to let him marry girlfriend

மத்தியப் பிரதேசத்தில் வினோதமான ஒரு விவாகரத்து வழக்கு வந்திருக்கிறது. போபாலைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கணவரை திருமணம் நடந்த மூன்றாண்டுகளுக்கு பின் விவகாரத்து செய்துள்ளார். இதற்கு காரணம், கல்யாணத்திற்குப் பின்னரும் காதலியை பிரிய மனமில்லாமல் அவரது கணவர் தவித்துள்ளார். இதை கண்டு வேதனை அடைந்த மனைவி, எங்கிருந்தாலும் நன்றாக இருங்கள் என்ற நினைப்பில், அவரது காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார்.

இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் கணவர், தனது மனைவியை விவாகரத்து செய்யாமல், தனது காதலியை திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். மேலும் மனைவி, காதலி இருவருடனும் திருமண உறவில் இருக்க வேண்டும் என்று அந்த கணவர் விரும்பி இருக்கிறார்.

woman divorces husband of 3 years to let him marry girlfriend

ஆனால் சட்டப்படி இது சாத்தியமில்லை என்பதால், அவரது மனைவி, தனது கணவர், அவரது காதலியை திருமணம் செய்ய உதவுவதற்காக அவருக்கு விவாகரத்து கொடுக்க முடிவு செய்தார். பின்னர் முறையாக விவாகரத்து வழங்கி, கணவரையும், அவரது காதலியையும் சேர்த்து வைத்துள்ளார் அந்த மனைவி.

இது குறித்து பேசிய இவ்வழக்கின் வழக்கறிஞர் ‘அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலேயெ தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார், இது சட்டப்படி சாத்தியமில்லை. ஆனால் அவரின் மனைவி மிகவும் முதிர்ச்சியடைந்தவர். அவர் தனது கணவரை அவரின் காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக அவரை விவாகரத்து செய்து அவரது காதலியை திருமணம் செய்ய உதவினார்’ என்று கூறினார்.

ஐஸ்வர்யா ராய், சல்மான்கான், அஜய் தேவ்கன் நடித்த ‘Hum Dil De Chuke Sanam' படத்தின் கதை போன்று உண்மை சம்பவம் நிகழ்ந்திருப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். மேலும், அந்தப் பெண்ணின் முடிவை பலரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதலை தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் கணவருக்கு எதிரான கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman divorces husband of 3 years to let him marry girlfriend | India News.