'இத சின்ன விஷயமா நினைக்காதீங்க'!.. அழகிய குடும்பத்தை சுக்கு நூறாக உடைத்த 'அலட்சியம்'!.. வெளியான அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Jul 25, 2020 03:39 PM

வீட்டுல் உள்ள டைனிங் டேபிளில் உணவு உண்டபின் தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை முறையாக எடுத்து வைக்காமல் சென்ற கணவனை,  மனைவி விவாகரத்து செய்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

usa ohio mathews husband wife divorce kitchen dinning conflict

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்த மேத்திவ்ஸ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களது 13 வருட குடும்ப வாழ்க்கையில் அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். அனைவரது குடும்ப வாழ்க்கையை போலவே அவர்களது வாழ்விலும் சுக துக்கங்கள் அனைத்தும் வந்து சென்றன. ஆனால், அவர்கள் இடையே இருந்த ஒரு சிறிய மனக்கசப்பு விவாகரத்து வரை கொண்டு சென்றது.

பொதுவாக கணவன் மனைவிக்குள் சண்டைகள் வருவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அதேபோல் இந்த தம்பதியனருக்கும் சண்டைகள் வந்துள்ளன. ஆனால், அவை சற்று வித்தியாசமானதாக இருந்துள்ளன. அவை வீட்டில் எடுத்த பொருட்களை சரியான இடத்தில் வைக்காததற்கான சண்டைகள். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேத்திவின் மனைவி விவாகரத்து செய்து பிரிந்து சென்றார்.

இதனை அடுத்து மேத்திவ் தனது குடும்ப வாழ்க்கை பிரிவு தொடர்பாகவும், கணவன் மணைவிக்குள் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் தனது வலைதளப்பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதில், அவள் பைத்தியம் என்று நான் உணர்ந்தேன். சமையல் அறையில் உள்ள உணவுப் பாத்திரங்களை முறையாக எடுத்து வைக்காதபோது எனது மனைவிக்கு உண்டாகும் கோபம், விரக்தி, சோகத்தின் ஆழத்தில் இடையே எந்தவிதமான அர்த்தமுள்ள தொடர்பையும் என்னால் ஏற்படுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

இதுபோன்ற சமையலறை பிரச்சனைகள் நிறைய தம்பதியருக்கு இருக்கிறது. இது ஒருபோதும் முடிவடையாத ஒரு வாதமாக இருக்கிறது, ஏனென்றால் இரண்டு பேரும் உண்மையில் ஒரே விஷயத்தைப் பற்றி விவாதிப்பதில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக நான் 2016 ஆம் ஆண்டு வலைதளப்பக்கத்தில் எழுதியபோது 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதைப் படித்தனர். அதில் சில ஆண்களும் பெண்களும் தங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். மற்றவர்கள் என்னை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டினர் என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Usa ohio mathews husband wife divorce kitchen dinning conflict | World News.