எப்பா ஒரு நிமிஷம் ‘தலையே’ சுத்திருச்சி.. டிரம்பை ‘விவாகரத்து’ செஞ்சா மெலனியாவுக்கு செட்டில்மெண்ட் பணம் மட்டுமே இவ்ளோ வருமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்தால் சுமார் ரூ.372.16 கோடி பெறுவார் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையின் முன்னாள் உதவியாளர் ஓமரோசா மணிகோல்ட் நியூமன் கூறுகையில், ‘டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலக உள்ளதை மெலனியா டிரம்ப் ஒவ்வொரு நிமிடமும் எண்ணிக்கொண்டு இருக்கிறார். டிரம்ப் பதவி விலகியதும் மெலனியா அவரை விவாகரத்து செய்ய வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக மெலனியா தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் டிரம்பை மெலனியா விவகாரத்து செய்தால் பல கோடி ரூபாய் அவருக்கு கிடைக்கும் என நிபுணர் பெர்க்மேன் பாட்ஜர் என்பவர் தெரிவித்துள்ளார். அதில், ‘மெலனியாவுக்கும், டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான தீர்வு 14 வயது மகன் பரோனைப் பொறுத்தது. நான் செய்தித்தாள்களில் படித்ததை வைத்து பார்க்கும்போது, முதன்மை பராமரிப்பாளர் யார் என்பது குறித்து அதிக கேள்வி எழுப்பப்படுவதாக தெரியவில்லை. என் யூகப்படி மெலனியாவுக்கு முதன்மைக் காவல் உரிமைகள் கிடைக்கும். இந்த வழக்கில் அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 372.16 கோடி) பெறுவார்’ என கூறினார்.
டிரம்பின் முந்தைய இரண்டு திருமணங்களின் முறிவின் போதும் டிரம்ப் இதேபோல் செட்டில்மெண்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் டிரம்பின் இரண்டாவது மனைவி, மார்லா மேப்பிள்ஸுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததாகவும், அவரது முதல் மனைவி இவானா டிரம்பிற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர், ஒரு மாளிகை, நியூயார்க்கில் ஒரு அபார்ட்மென்ட் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால் இதை வைத்து பார்க்கும்போது மெலனியாவும் பெரும் தொகையை பெறுவார் என வல்லுநர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.