'என் ஹஸ்பண்ட் வீட்டுக்கு வர்றதே இல்ல...' 'கணவன் மீது கேஸ் போட்ட மனைவி...' - கடைசியில கோர்ட்ல வச்சு அதிரடி ட்விஸ்ட்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரவலால் தன் கணவருக்கும் தனக்கும் இடையே குடும்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார் புனேவை சேர்ந்த பேராசிரியை ஒருவர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தங்களுடைய உயிரை பணயம் வைத்து மக்களுக்கு உதவி புரிந்தது முன்களப்பணியாளர்கள் எனக்குறிப்பிடப்படும் மருத்துவர்களும், சுகாதாரத்துறை சேர்ந்தவர்களும் தான். இந்நிலையில் புனே அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மீது அவரின் மனைவி குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த நுண்ணுயிரியல் பேராசிரியைக்கும், அரசு மருத்துவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், கொரோனா முன்களப் பணியாளராக உள்ளதால் தினமும் 18 மணி நேரத்திற்கு மேலாக மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்புவார். மேலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக தன் குடும்பத்தாரோடு பேசாமலும், இடைவெளியுடனும் இருந்துள்ளார்.
கணவரின் இந்த திடீர் மாற்றம் காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான பேராசிரியை, தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் மருத்துவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் காவல்துறையினர்.
இந்நிலையில் தற்போது இந்த வழக்கு மகாராஷ்டிரா உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் எம்.எஸ்.கார்னிக் அமர்வு முன் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் நடத்திய விசாரணையில் பேராசிரியை, 'கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருந்து கொரோனா பரவல் காரணமாக என் கணவர் பல மருத்துவமனையிலேயே பணியாற்றி வந்தார். தீடிரென ஏற்பட்ட இந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்குள் மன அழுத்தமும், பதற்றமும் அதிகமாகி அவர் மீது தவறான புரிதல்கள் ஏற்பட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சிறப்பு ஆலோசனைக்குப் பிறகு, இருவரும் மீண்டும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
வழக்கின் முடிவாக நீதிபதிகள் குறிப்பிடும் போது, இருவரின் இந்த முடிவால் நீதிமன்றம் மகிழ்ச்சி அடைவதோடு, தனிப்பட்ட வாழ்க்கையையும், குடும்பத்தையும் பிரிந்து கொரோனா நெருக்கடியில் மருத்துவர்கள் இரவும் பகலும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் மிகுந்த மரியாதை உடையவர்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக இரு தரப்பினரின் ஒப்புதலுக்குப் பிறகு, நீதிமன்றம் எப்ஐஆரை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது

மற்ற செய்திகள்
