பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள 'அதிர' வைக்கும் தகவல்...! - பில் கேட்ஸ்-மெலிண்டா தம்பதியினரின் விவாகரத்திற்கு 'இதுதான்' காரணமா...?
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிக பெரிய பணக்கார தொழிலாதிபதிகளில் ஒருவரான, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் நீண்ட காலமாக தகாத உறவு இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தன.

இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் போர்டிலிருந்து பில் கேட்ஸை விசாரணைக்க ஆணையம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மைக்ரோசாப்ட் நடத்திய இந்த விசாரணை முடிவதற்கு முன்பே பில் கேட்ஸ் போர்டிலிருந்து விலகியுள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை.
சுமார் 20 ஆண்டுகளாக இந்த உறவு நீடித்ததாக, பெயர் வெளியிட விரும்பாத பில் கேட்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வால்ஸ்ட்ரீட் ஜர்னலிடம் கூறியுள்ளார். அதோடு அந்த கதை சுமுகமாக முடிந்ததாகவும், கடந்த ஆண்டு பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் போர்டிலிருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய செய்தி என்னவென்றால் சில வாரங்களுக்கு முன்பு தான் பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து அறிவித்தனர், 27 ஆண்டுகால திருமண உறவை முடித்துக் கொண்டனர்.
அவர்களின் இந்த மனமுறிவுக்கு பில் கேட்ஸின் இம்மாதிரியான பழக்கங்கள் காரணமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
கூடுதலாக பில் கேட்ஸ் இதற்கு முன்பு பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், நெருங்கிய தொடர்பில் இருந்த காரணம் என அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
விவாகரத்து ஆனாலும் அறகட்டளை பணிகளை இருவரும் சேர்ந்து மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்தனர். ஏனென்றால் இது உலகிலேயே மிகப்பெரிய அறக்கட்டளைகளில் ஒன்றாகும்.
பில் கேட்ஸ் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன் (66) பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றுள்ளார் . அதோடு, சிறுமிகளை வைத்து மிகப் பெரிய பாலியல், 'நெட்வொர்க்' நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
