'இத கூட ஒழுங்கா எழுத தெரியாதா'... 'தனக்கு எதிராக கொடி பிடித்தவர்கள் எழுதியிருந்த வாசகம்'... செமயா கலாய்த்த மியா கலீஃபா!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிவசாயச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவளித்த பிரபலங்களில் நடிகை மியா கலீஃபா, பாப் பாடகி ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் அடங்குவார்கள்.

இவர்களுக்கு எதிராக ஒரு கும்பல் கோஷமிட்டும் அவர்களைக் கண்டிக்கும் விதமான வாசகங்கள் தாங்கிய அட்டைகளுடன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அந்த வாசகங்களில் அர்த்தமற்ற, முட்டாள்தனமான வாசகங்கள் இருப்பதாக மியா கலீஃபா கிண்டலடித்துள்ளார்.
ரிஹானா, மியா கலீஃபா, கிரேட்டா ஆகியோரை வசைபாடிய டிவட்டர்வாசிகள் கடும் கிண்டல்களுக்கும் வசைகளுக்கும் ஆட்பட்டனர். இதில் சிலர் தெருவில் இறங்கியும் ரிஹானா, மியா கலீஃபாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீ யார் என்று இவர்கள் மியா கலீபாவையும், ரிஹானாவையும் கடுமையாகத் தாக்கினர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை.
ஆனால், தெருவில் இறங்கி இவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் கையில் இருந்த பதாகைகளில், "மியா கலீஃபா ரீகெய்ன்ஸ் கான்ஷியஸ்னெஸ்" என்றும் "கிரேட்டா தன்பெர்க் ரீகெய்ன்ஸ் கான்ஷியஸ்னெஸ்" என்றும் காணப்பட்டது.
யாராவது கோமாவுக்குச் சென்றாலோ, மயக்கமடைந்தாலோதான் ரீகெய்ன் கான்ஷியஸ்னெஸ் என்று கூற முடியும். நினைவு திரும்பியது என்று கூற முடியும்.
அப்போதுதான் இவர்கள் எந்த ஹிந்தி வார்த்தையை கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டு அந்த மொழிபெயர்க்கப்பட்ட, தப்பும் தவறுமாக மொழிபெயர்க்கப்பட்ட, வாசகத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்று தெரியவந்தது. "hosh me aao" என்ற வார்த்தையைத்தான் கூகுள் ட்ரான்ஸ்லேட் இப்படி மொழிப்பெயர்த்துள்ளது. இதன் அர்த்தம் தெரியாமல் ஆர்ப்பாட்டக்காரர்களும் அதைத் தாங்கிய படியே கோஷமிட்டது நெட்டிசன்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
ஹோஷ் மே ஆவோ என்றால் 'கம் டு சென்சஸ்' என்று பொருள், இதனை புத்தியுடன் பேசுங்கள், கொஞ்சம் அர்த்தத்துடன் செயல்படுங்கள் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால், இதை கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் பதிவிட்டால் 'ரீகெய்ன் கான்ஷியஸ்னெஸ்' என்று தப்பான மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதை சரிபார்க்காமல் அப்படியே எழுதி பதாகைகளாகத் தாங்கி வந்தது மியா கலீஃபா பார்வையிலிருந்தும் தப்பவில்லை.
அவர் தன் ட்விட்டரில், "என் கான்ஷியஸ்னெஸ் ரீகெய்ன் ஆகி விட்டது என்று உறுதி செய்ததற்கு நன்றி. தேவையில்லாததாக இருந்தாலும் உங்கள் அக்கறைக்கு நன்றி. இன்னும் விவசாயிகள் பக்கம்தான் நிற்கிறேன்" என்று கிண்டல் செய்துள்ளார்.

மற்ற செய்திகள்
