14 வருசம் முன்னாடி.. வேலைக்கு APPLY பண்ண 'வாலிபர்'.. பதிலே வரல'ன்னு.. அவரு செஞ்சதுதான் 'அல்டிமேட்'
முகப்பு > செய்திகள் > உலகம்கல்லூரி படிப்பு முடித்த பின்னர், ஏதாவது வேலைக்கு சேர வேண்டும் என்ற முயற்சியை பலரும் மேற்கொள்வார்கள்.
Also Read | சர்வதேச போட்டியில்.. ட்ரெண்ட் போல்ட் எடுத்த முடிவு.. கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்
அப்படி நாம் வேலைக்கு முயற்சி செய்யும் போது, பல நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கவும் செய்வோம். இதில், நிறைய நிறுவனங்கள் நமது விண்ணப்பங்களை நிராகரிக்கவும் செய்யும்.
அப்படி ஒரு சூழ்நிலை வரும் போது, அடுத்தடுத்து நிறுவனங்களுக்கு முயற்சி செய்து கொண்டே கடந்து செல்வோம்.
ஆனால், அதே வேளையில், சில நிறுவனத்தில் நாம் வேலைக்கு விண்ணப்பித்து அவர்கள் நிராகரிக்கவும் செய்யாமல், நேர்காணலுக்கும் அழைக்காமல், பதில் எதுவும் தெரிவிக்காமல் இருந்தால் நிச்சயம் ஒருவித விரக்தி உருவாகும். எப்படியாவது பதில் வரும் என நாம் காத்திருக்கும் போது, அவர்கள் பதிலளிக்கவே மாட்டார்கள். இது பலருக்கும் ஒருவித வெறுப்பை உண்டு பண்ணும்.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு விண்ணப்பித்த ஒருவர், தற்போது செய்துள்ள காரியம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளம் மூலம் பிரபலமான நபர் ஒருவர், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு, நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து நிராகரிக்கப்பட்டதாக கூட அந்த இளைஞருக்கு பதில் எதுவும் வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால், தனக்கு பதிலே அளிக்காத நிறுவனத்தை வேடிக்கையாக பழி வாங்கும் நோக்கில், அந்த நபர் காரியம் ஒன்றை தற்போது செய்துள்ளார். அதன்படி, 14 ஆண்டுகளுக்கு பிறகு, தனது பதிலே அளிக்காத நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார் அந்த நபர். தொடர்ந்து, போனில் பேசிய அவர், front-of-house manager என்ற பதவிக்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்ததாக கூறுகிறார். ஆனால், அப்படி ஒரு பதவி தொடர்பாக விண்ணப்பித்த தகவல் எதுவும் இல்லை என்ற நிலையில், போனில் பேசிய அந்த ஊழியர், வேலைக்கு விண்ணப்பித்த ஆண்டு எது என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த வாலிபர், 2008 என கூறி, நீங்கள் வேலைக்கு ஊழியர்களை தேர்வு செய்ய நீண்ட செயல்முறை நடத்தி வருவதாகவும், 14 ஆண்டுகளாக இன்னும் யாரை சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்காமல் இருக்கிறீர்கள் என்றும் கூறி, எனக்கு வேறு இடத்தில் வேலை கிடைத்து விட்டது என்றும் கூறுகிறார். மேலும், தனது விண்ணப்பத்தினை திரும்ப பெறுவதாகவும் அவர் கூறி உள்ளார். நிறுவனத்தின் நடவடிக்கையை வேடிக்கையாக அந்த வாலிபர் குறிப்பிடவே, நிறுவனத்தின் ஊழியர் ஒரு நிமிடம் அதிர்ந்து போயுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு விண்ணப்பித்து பதில் வராத நிலையில், அந்த நிறுவனத்திற்கு அழைத்து விண்ணப்பத்தை திரும்ப பெறுகிறேன் என வாலிபர் கூறியுள்ளது தொடர்பான வீடியோவும் அதிகம் வைரலாகி வருகிறது.