"5 பேருக்கு ஸ்கெட்ச் போட்டோம்".. காதலிக்காக பழிவாங்கிய இளைஞர்.. இந்தியாவை நடுநடுங்க வச்ச சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் தொடர் கொலைகளில் ஈடுபட்டு வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொலைகளுக்கான பின்னணி குறித்து அவர் தெரிவித்திருப்பது இந்தியாவையே நடுங்க செய்திருக்கிறது.
கர்நாடகாவின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயது நபர், மாண்டியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றொரு பெண்ணைக் கொல்லத் தயாராகி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர் ராமநகர மாவட்டம் குதூரைச் சேர்ந்த டி சித்தலிங்கப்பா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய காதலி என்று நம்பப்படும் சந்திரகலா என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்த அதிர்ச்சி
கர்நாடகாகாவின் மாண்டியா பகுதியில் கடந்த ஜூன் 8 ஆம் தேதி, ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேபி லேக் மற்றும் அரகெரே கிராமத்தில் இருந்து தலா ஒரு பெண்ணின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று இடங்களிலும் பாதி உடல்கள் மட்டுமே கிடந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த வியாழக்கிழமை சித்தலிங்கப்பாவையும் சந்திர கலாவையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
பழிவாங்கல்
சித்தலிங்கப்பாவின் காதலி சந்திர கலா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஒருநாள், தன்னை இந்த நிலைக்கு கொண்டுவர சிலர் வற்புறுத்தியதாக கலா, சித்தலிங்கப்பாவிடம் சொல்லியிருக்கிறார். இதனை அடுத்து அவர்களை கொலை செய்ய இருவரும் முடிவெடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மைசூரின் தெற்கு மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் பிரவீன் மதுகர் பவார்,"சித்தலிங்கப்பா - கலா இருவரும் மாண்டியா பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர். அப்போது அந்தப் பெண்களை வீட்டுக்கு வரவழைத்து இருவரும் கொலை செய்திருக்கின்றனர். அவர்கள் மேலும், 5 பேரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றார்.
இந்நிலையில், காணாமல்போன மீதி உடல்களை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர். இது கர்நாடக மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | ரூ.1.3 கோடி ஸ்காலர்ஷிப்பில் படிப்பு .. UNESCO தலைவர்களுக்கே ஆலோசனை சொல்ல போகும் இந்திய மாணவன்.. !