பாம்புக் கடி மூலம் உயிரிழந்த அண்ணன்.. இறுதிச் சடங்கிற்கு வந்த சகோதரனுக்கும் காத்திருந்த துயரம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரபிரதேசம் மாநிலம், பவானிபூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா.

38 வயதாகும் அரவிந்தை சமீபத்தில் அப்பகுதியில் இருந்த போது பாம்பு ஒன்று கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் மிஸ்ரா பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்கும் ஒரு சில தினங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.
அரவிந்த் மிஸ்ராவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, அவரது உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அந்த வகையில், அரவிந்த் மிஸ்ராவின் சகோதரர் முறையில் ஒருவரான கோவிந்த் மிஸாரா எனபவரும் அங்கே இருந்துள்ளார். இறுதிச் சடங்கு முடித்து விட்டு, கோவிந்த் மிஸாரா, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவர் அருகே சந்திரசேகர் பாண்டே என்பவரும் தூங்கி உள்ளார். அந்த சமயத்தில், வீட்டின் அறைக்குள் நுழைந்த பாம்பு ஒன்று, கோவிந்தை கடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அத்துடன் அவருக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகர் பாண்டைவையும் பாம்பு கடித்து சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாம்பு கடி காரணமாக துடிதுடித்த சந்திரசேகர் மற்றும் கோவிந்த் ஆகிய இருவரையும், உறவினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் கோவிந்த் மிஸாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சந்திரசேகர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சகோதரர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம், அந்த கிராம பகுதியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமில்லாமல், இது தொடர்பாக அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியின் எம்எல்ஏ கைலாசநாத் சுக்லா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை பாம்பு கடித்த சம்பவம், பலரையும் குழப்பத்திற்குள்ளும், அதிர்ச்சிக்குள்ளும் ஆக்கி உள்ளது.

மற்ற செய்திகள்
