"என்னோட காஸ்ட்லி BAG-ல என்ன பண்ணிருக்காருன்னு பாருங்க".. முன்னாள் காதலன் மீது வழக்கு போட்ட இளம்பெண்.. பரபரப்பான நீதிமன்றம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட இளைஞருக்கு 91 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது நீதிமன்றம்.
Also Read | சட்டுன்னு அதிகரித்த கொரோனா பாதிப்புகள்.. சீன அரசு எடுத்த முடிவு.. பரபரப்பான உலக நாடுகள்..!
காதலில் இருக்கும் நபர்கள் தங்களது இணையை கவர பல வழிகளில் முயல்வதை பார்த்திருக்கிறோம். சர்ப்ரைஸாக பல திட்டங்களை யோசித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்த துணிச்சலுடன் களத்தில் இறங்குபவர்களை பற்றியும் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில சமயங்களில் காதலர்களுக்குள் பிரிவு ஏற்படும்போது அவர்களுக்குள் இருந்த அன்பு மறைந்து பழிவாங்கும் எண்ணம் தலைதூக்கிவிடும். சில வினாடிகள் ஏற்படும் இந்த அதீத கோபத்தை கட்டுப்படுத்த தவறுபவர்கள் பின்னாளில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகவும் நேரிடும். அப்படித்தான் நடந்திருக்கிறது தென் கொரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும்.
வாக்குவாதம்
தென் கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியில் உள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது தான் அதிகமாக செலவு செய்துவருவதாகவும் அதனால் கடனாளி ஆகிவிட்டதாகவும் அந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் நேரடியாக பெண்ணின் அறைக்குள் சென்றிருக்கிறார். அங்கிருந்த அவரது விலையுயர்ந்த பையில் சிறுநீர் கழித்திருக்கிறார்.
வழக்கு
இதனை அறிந்த பெண், உடனடியாக தனது காதலன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த விசாரணையின்போது தான் அந்த பையில் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், அவ்வாறு நடித்ததாகவும் இளைஞர் கூறியுள்ளார். ஆனால், உண்மையை கண்டறிய மரபணு சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. இதை தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில் அந்த இளம்பெண்ணின் பையில் வாலிபரின் டிஎன்ஏ இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், தனது தவறை மறைக்க பையில் வாசனை திரவியத்தை அவர் தெளித்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில் வாலிபரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மேலும், தனது முன்னாள் காதலியை பழிவாங்கும் நோக்கில் அவருடைய விலையுயர்ந்த பையில் சிறுநீர் கழித்த வாலிபருக்கு 1,150 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.91,634) அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம்.
Also Read | கேமராவில் சிக்கிய அரியவகை வெள்ளை மான்.. மீண்டும் வைரலாகும் வீடியோ.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிர்ச்சி தகவல்.!