ஒரே ஒரு AIRPOD-க்காக.. 7,000 கி.மீ தூரம் பறந்த இளைஞர்.. "செலவு மட்டும் 2 லட்சத்துக்கும் மேலயாம்.." காரணம் அறிந்து மிரண்டு போன நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் லீவிஸ் எல்லிஸ். இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக, பாங்காக்கில் இருந்து டோஹா செல்லும் விமானத்தில் ஏறி உள்ளார்.
Also Read | ரகசிய உறவில் இருந்த ஷேன் வார்னே??.. அஞ்சு மாசத்துக்கு அப்புறம் ஆஸ்திரேலிய பெண் சொன்ன பரபரப்பு 'தகவல்'
அப்போது, தனது AirPods-ஐ விமானத்திலேயே லீவிஸ் மறந்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென ஞாபகம் வந்ததும் மீண்டும் விமானத்திற்குள் செல்ல முடியாது என்பதால், அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் வீமானத்தில் சென்று தேடியுள்ளனர். ஆனால், உள்ளே Airpods இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், வெறுங்கையுடன் திரும்பிய லீவிஸ் மிகவும் வினோதமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். வேறு யாராவது இருந்தால், தொலைந்த Airpod-ஐ மறந்து விட்டு புதிதாக ஒன்றை வாங்கி இருப்பார்கள்.
ஆனால், லீவிஸ் "Find My app" எனும் செயலி மூலம் தன்னுடைய ஐபோன் Airpod எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளார். தொடர்ந்து ஐந்து மாதங்களாக அவருடைய Airpod எங்கெல்லாம் சென்று கொண்டிருக்கிறது என்பதை அந்த செயலி மூலம் லீவிஸ் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கத்தாரில் இருந்து காத்மண்டுவிற்கும், அதன் பின்னர் ஹிமாலயன் மலை அருகே உள்ள சிறிய கிராமத்திற்கும் அவரது Airpod சென்று கொண்டே இருந்த கண்காணித்து வந்துள்ளார்.
இறுதியில், நீண்ட நேரம் Doha பகுதியில், Airpod இருந்ததால் அடுத்ததாக அசத்தல் திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் லீவிஸ். அதாவது, நேராக டோஹாவுக்கு சென்று Airpod-ஐ மீட்டு வரலாம் என்றும் அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக தனது நண்பர் ஒருவரை சேர்த்துக் கொண்ட லீவிஸ், டோஹாவிற்கு சென்றுள்ளார்.
டோஹாவில் Airpod சிக்னல் காட்டிய பகுதிக்கு சென்ற லீவிஸ் மற்றும் அவரது நண்பர், அங்கே இருந்த குடியிருப்பின் வீட்டிற்கு சென்றுள்ளார்.அந்த வீட்டிற்குள் ஏராளாமானோர் இருந்த நிலையில், எந்தவொரு அசம்பாவிதமும் நேராமல், மீண்டும் தனது Airpod-ஐ பெற்றார் லீவிஸ். உள்ளே போய் Airpod பற்றி சொன்னதும் அவர்கள் மறுப்பு எதுவும் சொல்லாமல், லீவிஸிடம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், அதில் ஒருவர் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய Airpod மீண்டும் கிடைத்ததால், சந்தோஷத்தில் குழந்தை போல துள்ளிக் குதித்துள்ளார் லீவிஸ்.
இது பற்றி பேசும் லீவிஸ், தனது தாய் தன்னை ஒரு பைத்தியம் என்று நினைத்ததாகவும், ஆனால் இது மிகவும் பொழுதுபோக்காக தனக்கு தோன்றியதாகவும் கூறியுள்ளார். ஒரே ஒரு Airpod-க்காக சுமார் 7,000 கி.மீ பயணம் செய்த லீவிஸ், இதற்காக மொத்தம் 2,300 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 2.2 லட்சம் ரூபாய்) செலவு செய்துள்ளது தான், பலரையும் மிரள வைத்துள்ளது.