"நான் மறுபிறவி எடுக்க போறேன்.." திரைப்படம் பாத்துட்டு இளைஞர் எடுத்த முடிவு.. கடைசியில் நடந்த 'விபரீதம்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Aug 14, 2022 05:42 PM

பிரபல திரைப்படம் ஒன்றிற்கு அடிமையான இளைஞர் ஒருவர், அதில் வரும் விஷயம் போல செய்ய முயன்ற சம்பவம் ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

karnataka man inspired by movie wants to immolate himself

Also Read | இது ரியல் ‘சிட்டி’..!! மனித உணர்வுகள் கொண்ட ரோபோவை அறிமுகப் படுத்திய Xiaomi .. சிலிர்க்க வைக்கும் Making வீடியோ

பொதுவாக, சினிமாவை அதிகம் விரும்பி பார்க்கும் பலரும் அதில் வரும்  கதாபாத்திரம் உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக, அதிகம் அதன் மீது ஈடுபாடு கொண்டு அதில் வரும் வசனங்கள் மற்றும் மேனரிசம் உள்ளிட்ட விஷயங்களை செய்யக் கூட முயற்சிப்பார்கள்.

அப்படி சினிமா மீது, ஒரு படி அதிக நாட்டத்துடன் இருந்த இளைஞர் தான் ரேணுகா பிரசாத். 23 வயதாகும் இவர், கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், மதுகிரி தாலுகா பகுதியில் அமைந்துள்ள கொண்டவாடி என்னும் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் கொண்ட ரேணுகா பிரசாத், பியுசி முதல் ஆண்டு முடிந்ததும் படிப்பை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்த ரேணுகா பிரசாத், வீட்டில் இருந்த படியே நிறைய திரைப்படங்களையும் பார்த்து வந்துள்ளார். அதே போல, அதில் வரும் காட்சிகளை கூட பாவித்து அப்படியே நடித்து வருவதையும் ரேணுகா பிரசாத் வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், சமீபத்தில் ஒரு திரைப்படத்தை தொடர்ந்து பல முறை ரேணுகா பிரசாத் பார்த்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரம், மறுபிறவி எடுத்து மீண்டும் உயிர் பெற்று வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்ட ரேணுகா பிரசாத், மறுபிறவி எடுக்க விருப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

karnataka man inspired by movie wants to immolate himself

அப்படி ஒரு சூழ்நிலையில், விபரீத முறையில் உயிரிழக்கும் நடவடிக்கையையும் இளைஞர் ரேணுகா பிரசாத் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த பிறகும், காப்பாற்ற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. அவரை மீட்க முடியாமல், அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் கதறித் துடித்த சம்பவம், பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

மேலும், திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, மறுபிறவி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இளைஞர் செய்த காரியமும் பலரை பதற்றம் அடைய செய்துள்ளது.

Also Read | நீரில் அடித்து செல்லப்பட்ட 'பெண்'.. நடுவழியில் ஞாபகம் வந்த மகனின் 'முகம்'.. இரவு முழுவதும் நடந்த போராட்டம்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Tags : #KARNATAKA #MAN #INSPIRE #MOVIE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Karnataka man inspired by movie wants to immolate himself | India News.