Tiruchitrambalam D Logo Top

"ஆத்தாடி, வசூல் ஆனது மட்டும் இத்தன கோடியா?".. அமர்க்களமாக நடந்த "மொய் விருந்து".. களைகட்டிய 'நெடுவாசல்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Aug 19, 2022 04:09 PM

தமிழகத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில், இன்றும் பல பாரம்பரியமான விருந்துகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

moi festival in pudhukottai collection around 15 crores

Also Read | சென்னை விமான நிலையத்தில்.. பயணிகள் ஓய்வெடுக்க அசத்தல் கேப்சூல் hotel.. "என்னென்ன வசதி எல்லாம் இருக்கு??"

அதிலும் குறிப்பாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில், மொய் விருந்து என்பது தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர், புதுக்கோட்டையில் அமைந்துள்ள எல்லை கிராமங்களில், ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மொய் விருந்து விழாக்கள் மிகவும் அசத்தலாக நடைபெறும்.

காலம் காலமாக இந்த விருந்து நிகழ்ச்சி பின்பற்றப்பட்டு வரும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் மொய் விருந்து விழாக்கள் களையிழந்து காணப்பட்டன. அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், மீண்டும் இந்த மொய் விருந்து விழாக்கள் பொலிவு பெற்றுள்ளது.

moi festival in pudhukottai collection around 15 crores

மொய் விருந்து விழா நடைபெறுவது தொடர்பாக முன்னரே அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும். இதன் பின்னர், அசத்தலான ஏற்பாடுகளுடன் குறித்த நாளில் மொய் விருந்து நடைபெறும். இதில் பல அசைவ விருந்து வழங்குவதாக கூறப்படும் நிலையில், மொய் விருந்து நடக்கும் பகுதியில், மக்கள் கூட்டம் மொய்க்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள், முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிழக்கு கிராமத்தில் 31 பேர் இணைந்து மொய் விருந்து விழா ஒன்றை நடத்தினர்.

moi festival in pudhukottai collection around 15 crores

இந்த விழாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிலையில், மொய் விருந்து நிகழ்வில், ஒரே நாளில் வசூலாகியுள்ள தொகையின் விவரம் பலரையும் மிரள வைத்துள்ளது. மொத்தமாக 15 கோடி ரூபாய், இந்த மொய் விருந்து நடத்தியவர்களுக்கு வசூலாகி உள்ள நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் 2.50 கோடி ருபாய் வரை வசூல் ஆனது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

மொய் விருந்து நடத்திய 31 பேர்களில், மேலும் சிலருக்கும் 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது. இது போக அந்த விழாதாரர்களில், இருபதுக்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில், தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் தொகை வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மொய் விருந்து மூலம், மொத்தம் 15 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளதால், இந்த விருந்தினை நடத்தியவர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

Also Read | தோசை கூட வீட்டில் சுடாத கிராமம்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு சாபம் தான் காரணமா??".. திகைக்க வைக்கும் 'வரலாறு'!!

Tags : #MOI FESTIVAL #PUDHUKOTTAI #MOI FESTIVAL IN PUDHUKOTTAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Moi festival in pudhukottai collection around 15 crores | Tamil Nadu News.