"லவ் PROPOSE பண்ற நேரத்துல தான் இப்டி நடக்கணுமா?".. வாலிபருக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. விழுந்து விழுந்து சிரிச்ச காதலி!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 29, 2022 12:54 AM

அடிக்கடி சோஷியல் மீடியாவில் ஏராளமான வீடியோக்கள் அல்லது நிகழ்வுகள் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.

man tries to propose boat ring falls in water

அதிலும் குறிப்பாக, காதல் Propose செய்வது தொடர்பான வீடியோக்கள் பெரிய அளவில் நெட்டிசன்கள் கவனத்தை பெறும்.

நம் மனதுக்கு பிடித்தமான ஒரு நபரிடம் காதலை வெளிப்படுத்தும் போது அதனை மிகவும் சர்ப்ரைஸாக எப்போது நினைத்து பார்த்தாலும் மனதில் நிற்கக் கூடிய வகையில் இருப்பது போல சொல்ல முயற்சிப்போம். ஒரு வேளை அந்த முயற்சி சிறப்பாக கைகூடினாலும் மறுபக்கம் ஏதாவது சொதப்பல் ஏற்படக் கூட வாய்ப்புள்ளது.

அந்த வகையில் ஃப்ளோரிடா பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய காதலியிடம் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்யும் போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

man tries to propose boat ring falls in water

Scott Clyne என்ற நபர் பகிர்ந்த வீடியோவில், அவர் தனது காதலியான Suzie Tucker என்பவருடன் படகு ஒன்றில் இருக்கிறார். அப்போது டைட்டானிக் படத்தில் வருவது போல இருவரும் கப்பலில் நிற்க, தனது பாக்கெட்டில் இருந்த மோதிர பாக்ஸை எடுத்து முழங்காலிட்டு தனது காதலை வெளிப்படுத்தவும் ஸ்காட் முயற்சி செய்கிறார். ஆனால் அவர் கையில் இருந்த மோதிர பெட்டி தவறி தண்ணீருக்குள் விழ, ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுகணமே நீரில் குதித்து விட்டார் ஸ்காட்.

அது மட்டுமில்லாமல், அந்த நீருக்குள் இறங்கி தனது மோதிர பெட்டியையும் வெளியே எடுத்து வெற்றிகரமாக வந்தார். இதனைக் கண்டதும் அவரது காதலி சிரித்துக் கொண்டே இருக்க, பின்னர் மோதிரத்துடன் தனது காதலை மீண்டும் ஸ்காட் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. நீரில் விழுந்த மோதிர பெட்டியை ரிஸ்க் எடுத்து நீரில் மூழ்கி எடுத்து காதலை வெளிப்படுத்திய ஸ்காட்டின் காதலை காதலி சுசி ஏற்றுக் கொள்ளவும் செய்தார்.

man tries to propose boat ring falls in water

காதலை வெளிப்படுத்த வாலிபர் முயன்ற சமயத்தில் எதிர்பாராத சம்பவமும் அதன் பின்னர் அந்த வாலிபர் செய்த காரியமும் தற்போது இணையவாசிகள் மத்தியில் பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Tags : #LOVE PROPOSAL #VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man tries to propose boat ring falls in water | World News.