'கச்சா பாதாம்' வியாபாரி STYLE-ல பழ வியாபாரி எடுத்த புது ரூட்.. வேற லெவலில் ENJOY செய்யும் நெட்டிசன்கள்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, நாம் சாலைகளில் அல்லது சந்தை பகுதிகளில் நடந்து செல்லும் போது, அங்கே கடை நடத்தி வரும் வியாபாரிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் போது, கூவி கூவி தங்களின் பொருட்களை விற்பனை செய்வார்கள்.

அப்படி விற்பனை செய்யும் போது தான், அவ்வழியே செல்லும் மக்கள், அந்த கடைகளை கவனித்து பொருட்கள் விற்பனை ஆகவும் வழி வகுக்கும்.
அது மட்டுமில்லாமல், மீண்டும் மீண்டும் தங்களின் கடைகளுக்கு அதிகம் வாடிக்கையாளர்களை வர வைக்கவும் அது வழியை உண்டாக்கும்.
பழ வியாபாரி எடுத்த ரூட்
இந்நிலையில், பழ வியாபாரி ஒருவர் மிக வித்தியாசமாக அதே வேளையில், தன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்க சற்று வேடிக்கையான வழியை கையில் எடுத்துள்ளது தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
தர்ப்பூசணி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பழங்களை விற்கும் வியாபாரி ஒருவர், தன்னுடைய அசத்தலான டெக்னிக் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பப்பாளி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மிகவும் வித்தியாசமாக அவர் வெட்டுவது, மிகவும் வேடிக்கையாக உள்ளது. பழங்களை வெட்டி முடித்த பின்னர், மிகவும் குறும்பாக தனது முக பாவனைகளை மாற்றி மாற்றி, அங்கே கத்தவும் செய்கிறார்.
பாக்குறவங்க எல்லாரும் சிரிச்சிட்டே இருக்காங்க..
மேலும், பழங்கள் அனைத்தும் நன்றாக பழுத்து விட்டது என அவரது பாணியில் வேடிக்கையாக கூறுகிறார் அந்த பழ வியாபாரி. இப்படி கத்திக் கொண்டே வித்தியாசமான முக பாவனைகளை காட்டி, அதற்கு மத்தியில் சேட்டை செய்து பழம் விற்கும் வியாபாரியை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அதே போல, குறும்புத்தனமான அவரின் வியாபார யுக்தி குழந்தைகளையும் அதிகம் கவர்ந்துள்ளது.
இது தொடர்பான வீடியோவை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த நெட்டிசன் ஒருவர், "இவரை போல நான் பழம் வாங்கும் வியாபாரியும் பழம் விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை எனில், நான் அந்த பழங்களை வாங்க மாட்டேன்" என குறிப்பிட்டுள்ளார். அதே போல, மேலும் பல நெட்டிசன்களும் மற்ற பழ வியாபாரிகளும் இந்த யுக்தியை பின்பற்றலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
If my Fruit dealer ain’t this passionate about fruits then I don’t want it#unexpected #India #ViratKohli #indianfood #seller #talent pic.twitter.com/OLBTChocDQ
— Unexpected Scenes (@unexpected_new) July 4, 2022
இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படாத நிலையில், அந்த பழ வியாபாரி ஹிந்தியில் பேசுவது மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.

மற்ற செய்திகள்
