"இவங்கள பாத்தாலே ஃபுல் பாசிட்டிவ் VIBE தான்".. லோக்கல் ரயிலில் கவனம் ஈர்த்த பாட்டி.. வைரல் வீடியோ!!.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > இந்தியாஅடிக்கடி இணையத்தில் ஏராளாமான வீடியோக்கள் வைரலாவதை நாம் பார்த்திருப்போம். இதில், பல வீடியோக்கள் நம் கவனத்தில் படும் நிலையில், அதிர்ச்சிகரமான, வினோதமான, மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையில் என பல வீடியோக்கள் இணையத்தில் நிரம்பி கிடக்கும்.

அதிலும் குறிப்பாக, சில தினங்களில் நாம் பார்க்கும் வீடியோக்கள் அந்த தினத்தையே இன்னும் பாசிட்டிவ் ஆகவும், மிகவும் ஸ்பெஷல் ஆகவும் கூட மாற்றலாம்.
அத்துடன் மட்டுமில்லாமல், அப்படிப்பட்ட வீடியோக்கள் நமது முகத்தில் ஒருவித சிரிப்பையும் உண்டு பண்ணி, நம்மை பெரிய அளவில் ஊக்குவிக்கவும் செய்யும்.
இந்நிலையில், அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மும்பையின் உள்ளூர் ரயிலில் மூதாட்டி ஒருவர் சுடிதார் அணிந்து பயணிகளுக்கு சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை விற்பனை செய்து வருகிறார்.
தள்ளாடும் வயதிலும் மிகவும் கூலாக, அதே வேளையில் சிரித்த முகத்துடன் பயணிகளிடம் தின்பண்டங்களை மூதாட்டி விற்பனை செய்து வருவது தொடர்பான வீடியோ, தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
மேலும், தனது கேப்ஷனில், "இந்த பெண்ணை போல ஆயிரக்கணக்கானோர், மிகவும் கடினமாக உழைத்து தங்களின் பசியை போக்கி வருகின்றனர். முடிந்தால் இது போல உள்ளவர்களிடம் இருந்து பொருட்களை வாங்குங்கள்" என ஸ்வாதி மாலிவால் குறிப்பிட்டுள்ளார்.
किसी की ज़िंदगी आराम है, संघर्ष किसी की ज़िंदगी का नाम है। ये महिला और इनके जैसे हज़ारों लोग जो मेहनत कर दो वक्त की रोटी कमाते हैं, हो सके तो उनसे सामान ज़रूर खरीदें। pic.twitter.com/zKXU3oIE8w
— Swati Maliwal (@SwatiJaiHind) September 5, 2022
இந்த வீடியோவைக் காணும் நெட்டிசன்கள் பலரும், அந்த மூதாட்டியின் செயலுக்கு பாராட்டுக்களைக் குறிப்பிட்டு வருகின்றனர். தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி என இரண்டும் கலந்து செயல்படும் இந்த சுடிதார் மூதாட்டி, பல இளைஞர்களின் இன்ஸபிரேஷனாக இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
