"ஜஸ்ட் மிஸ்ஸு, இல்லன்னா என்ன ஆகி இருக்கும்?.." வேகமாக கடைய பாத்து நடந்த நபர்.. நடுவுல நடந்த நடுங்க வைக்கும் 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாக, நாம் எங்காவது சென்று கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென ஒரு செகண்ட்டில் நாம் உயிர் பிழைப்பது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறினால் எப்படி இருக்கும்.
![footpath cracks seconds after man walks on it and cross footpath cracks seconds after man walks on it and cross](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/footpath-cracks-seconds-after-man-walks-on-it-and-cross.jpg)
நிச்சயம் அடுத்த சில நிமிடங்கள், நம்மையே நாம் நம்ப முடியாமல், அப்படியே பீதியில் உறைந்து போய் நிற்போம். கண்டிப்பாக, வாயை திறந்து ஒரு வார்த்தை பேசக் கூட முடியாமல், நாம் தான் உயிர் பிழைத்தோமா என்பது போல, அப்படியே நம்பாமல் பார்த்துக் கொண்டிருப்போம்.
இந்நிலையில், அப்படி ஒரு சம்பவம் தான், தற்போது அரங்கேறி, வீடியோக்களாகவும் வெளியாகி, பலரையும் அப்படியே அதிர வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், சாலை அருகே இருந்த கடையின் சிசிடிவி காட்சிகள் தான், தற்போது இணையத்தில் ரவுண்டு அடித்து வருகிறது. சாலையில் வாலிபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்த நிலையில், அங்கே இருக்கும் கடை ஒன்றை நோக்கி, வேகமாக நடந்து வருகிறார்.
அந்த சமயத்தில், கால்வாய் கான்க்ரீட் பாலம் ஒன்றைஅவர் கடக்கும் சமயத்தில், சரியாக அந்த பாலமும் உடைந்து அடியில் சென்று விடுகிறது. தனது கடைசி காலடியை அந்த நபரும் எடுத்து வைக்க, அவர் காலை வேகமாக எடுப்பதும், அந்த கான்க்ரீட் பாலம் இடிவதும் ஒரே நேரத்தில் அரங்கேறுகிறது. ஒரு நொடி அவர் மெதுவாக நடந்திருந்தால் கூட, சரியாக கான்க்ரீட் பாலம் நடுவில் நின்ற படி, உள்ளே செல்ல வேண்டிய நிலை உருவாகி இருக்கலாம்.
ஆனால், ஒரு நொடி வித்தியாசத்தில் அவர் காலை எடுக்கவே, கான்க்ரீட் பாலமும் இடிந்து உள்ளே செல்கிறது. இதனை அறிந்ததும், தாம் தப்பித்ததை எண்ணி அந்த நபர் தலையில் கைவைத்த படி, அப்படியே ஒருசில தருணம் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அதன் பின்னர், அங்கிருந்த கடையில் இருந்து ஒரு சிலரும் வெளியே வரவே, அவர்களும் என்ன நடந்தது என்பது புரியாமல் ஒரு நிமிடம் குழம்பி நிற்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் ரவுண்டு அடித்து வரும் நிலையில், அந்த வாலிபர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றும், ஒரு செகண்ட் தவறி இருந்தால் கூட அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும் மிரண்டு போய் குறிப்பிட்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)