"இப்டி ஒரு அன்புக்கு தான்யா ஏங்கிட்டு இருக்கோம்.." சில்லென மழையிலும் சிலிர்க்க வைத்த தள்ளாடும் தம்பதி.. நெட்டிசன்களை உருக வச்ச வீடியோ..
முகப்பு > செய்திகள் > இந்தியாகாதலுக்கு கண் கிடையாது என்ற வார்த்தை உண்டு. அதாவது, காதல் என்ற இந்த ஒற்றை வார்த்தை பிரபஞ்சத்திற்கு வயதோ, நிறமோ, உடையோ, அழகோ என எந்த ஒரு வரையறையும் கிடையாது.

மனிதன், மிருகம், பறவை, செடி, கொடி என உலகத்தில் நிறைந்திருக்கும் அனைத்திற்கும் இடையே காதல் உள்ளது.
இதில், பொதுவாக கணவன், மனைவிக்கு இடையே தோன்றும் காதல் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சில நேரம், நடுவே ஏதாவது பிரச்சனைகள் அல்லது விரிசல்கள் விழலாம்.
ஆனால், இவை அனைத்தையும் தாண்டி வயதும், ஆண்டுகளும் கடந்து இறுதி மூச்சு உள்ளவரை நிலைத்து நிற்கும் அன்பு நிறைந்த காதல் என்பது மிக மிக உன்னதமான ஒன்று. அப்படி ஒரு வீடியோ தான், தற்போது இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகிறது.
சற்று வயதான தம்பதியர், மழை நேரத்தில் குடை பிடித்தபடி சாலையை கடந்து செல்கின்றனர். தள்ளாடும் வயதிலும், மனைவிக்கு கணவர் குடையே பிடித்த படி, ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டே, மிகவும் கவனமாக சாலையைக் கடந்து இருவரும் செல்கின்றனர். பார்ப்பதற்கு இந்த வீடியோ சற்று சாதாரணமாக தெரிந்தாலும், இத்தனை ஆண்டுகள் கடந்து அன்பு நிலைத்து நிற்பது என்பது இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அன்பு என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் இது தான் என பலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதே போல, "கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும்" என்ற பாடல் வரிகளையும் இந்த தம்பதியரின் அன்பிற்கு உதாரணமாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
அது மட்டுமில்லாமல், மேலும் சிலர் தங்களின் தள்ளாடும் வயதில், பணம், சொத்து என எதுவும் வேண்டாம் என்றும், இது போன்று ஒரு அன்பு கிடைத்தாலே போதுமானது தான் என ஏங்கும் வகையிலும் உருக்கத்துடன் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
