"மக்களே DAM-ல் மழை பேஞ்சதால".. - சேட்டை சிறுவர்களின் நேரலை வானிலை ரிப்போர்ட்.. வைரல் SPOOF வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீலகிரியில் இரண்டு சிறுவர்கள் சேர்ந்து டிவி நிகழ்ச்சி LIVE-ல் வானிலை அறிக்கை செய்தியை போல் மக்களுக்கு வெளியிடக்கூடிய விளையாட்டான வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
குழந்தைகள் எது செய்தாலும் அழகு. அப்படிதான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் செய்தியாளரை போல பேசுவதற்கு தயாராக நிற்கிறார். இன்னொருவர் அவரிடம் மைக்கை நீட்டி கொண்டு செய்தியாளரை பேட்டி எடுக்கக்கூடிய நபர் போல நிற்கிறார்.
இவர்களுக்கு பின்னணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கரையில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கும் இவர்கள் அது பற்றி விவரிக்க வேண்டும். அதில் ஒரு சிறுவன் நன்றாக கைகளை ஆட்டி எக்ஸ்பிரஷன் கொடுத்து, “டேமில் மழை பெய்ததால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது!” என்று ஒரு தேர்ந்த ரிப்போர்ட்டர் போல் பேசுகிறார்.
“டேமில் மழை பெய்ததால்” என்று அந்த சிறுவன் தொடங்கும்போதே நமக்குள் சிரிப்பு எழுந்தாலும், சிறு குழந்தைகள் செய்யும் இந்த விளையாட்டான சேட்டைகள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பொதுவாகவே மழை & வெள்ளம் வந்தால் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தச் சிறுவர்கள், “நீங்கள் என்ன எங்களுக்கு விடுப்பு அளிப்பது... நாங்களே வானிலை அறிக்கை படித்து நாங்களே விடுப்பு கொடுத்துக் கொள்கிறோம்” என்பது போல அழகாக தட்பவெட்ப நிலை குறித்த தகவல்களை தொகுத்து செய்தி வீடியோவாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இதுபோன்ற கிரியேட்டிவ் மனநிலை இவர்களின் எதிர்காலத்தில் இன்னும் இவர்களை வளமாக்கும் என்றும் பலரும் இந்த சிறுவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
Also Read | "தல முடி இந்த Colour-ல இருந்தா சினிமா டிக்கெட் Free".. புதுசால்ல இருக்கு? விசேஷ அறிவிப்பின் பிண்ணனி..!