"பைக் எப்படியா தன்னால நகருது??.." வியப்பை ஏற்படுத்திய வீடியோ.. "ஒரு செகண்ட் உத்து பாக்குறப்ப தான் விஷயமே தெரியுது.."

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jun 30, 2022 10:16 PM

இணையத்தில் தினந்தோறும் ஏராளமான நேரத்தை செலவிட்டு வரும் நாம், அதில் வேடிக்கையான, அதிர்ச்சியான அல்லது சிந்திக்க வைக்கக் கூடியது என பல விதமான செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பலவற்றை கடந்து செல்வோம்.

Young man viral video with bike netizens find the logic

அவற்றுள் சில நிகழ்வுகள், நெட்டிசன்கள் மத்தியில் அதிக அளவில் வைரலாவதற்கும் தவறுவதில்லை. அந்த வகையில், ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி, அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் வரும் பாடல் ஒன்றில், சிம்பு ஒரு பக்கம் ஆடிக் கொண்டிருக்க, அவரது புல்லட் பைக்கும் சேர்ந்து தனியாக நெளிந்து வளைந்து ஆடிக் கொண்டிருக்கும்.

ஸ்லோ மோஷனில் வரும் இளைஞர்..

சிம்புவின் பைக் தனியாக ஆடிக் கொண்டிருப்பதை போலவே, இளைஞர் ஒருவர் இணையத்தில் வெளியிட்ட வீடியோவிலும் பைக் ஒன்று தனியாக ஆடிக் கொண்டிருக்கிறது. அதற்கு மத்தியில் நடக்கும் ஒரு சம்பவம் தான், நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், இளைஞர் ஒருவர் சாலை ஓரமாக, மெல்ல ஸ்லோ மோஷனில் நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அது மட்டுமில்லாமல், அவரது இடது பக்கம் நிற்கும் பைக் ஒன்றும், அந்த இளைஞருடன் சேர்ந்து, எந்த ஒரு துணையும் இல்லாமல், சென்று கொண்டிருப்பது போல வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிமிடம் பட்டென பார்ப்பதற்கு அந்த பைக் தனியாக வருவது போல தோன்றுகிறது. ஆனால், எப்படி என சிலருக்கு ஆச்சரியமாக தோன்றினாலும், வீடியோவை ஒரு நொடி உற்று பார்க்கும் போது உண்மை தெரிந்து விடுகிறது.

கொண்டை'ய மறந்துட்டோமே..

ஸ்லோ மோஷனில் நடந்து வரும் இளைஞரின் நண்பர் ஒருவர், பைக்கின் இடது புறம் ஒளிந்து கொண்டிருந்த படி, பைக்கினை மெல்ல தள்ளிக் கொண்டே வருகிறார். அப்படி வரும் போது, அவரின் கை மற்றும் கால் பகுதிகள் வீடியோவில் தெள்ளத் தெளிவாக தெரிந்து விடுகிறது.

'கலகலப்பு' படத்தில் சந்தானம் சொல்வது போல. "எங்க ஆளுங்க தான். ஒளிஞ்சிருக்கிற லட்சணம் அப்படி" என்றது போல, பைக்கை தள்ளி கொண்டுவரும் இளைஞரும் தான் தெரியக் கூடாது என்ற நிலையில் இருந்தாலும், அவரது கை கால்கள் காட்டி கொடுத்து விடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், அந்த இளைஞர் ஒரு வேளை வேண்டுமென்றே, ஒரு வேடிக்கைக்காக கூட ஜாலியாக இந்த வீடியோவை எடுத்து இருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், சற்று வித்தியாசமான மற்றும் பலரையும் சிரிக்க வைக்க கூடிய இந்த வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

Tags : #BIKE #VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Young man viral video with bike netizens find the logic | World News.