7 மாசம் கழிச்சு திரும்பி வந்த இளைஞர்.. "அவர பாத்ததும் ஷாக் ஆகி நின்ன ஒட்டுமொத்த குடும்பம்.. உலக அளவில் வைரல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Nov 29, 2022 12:44 AM

தனது குடும்பத்தினருடன் ஒட்டுமொத்தமாக உறவை துண்டித்த வாலிபர் ஒருவர், சுமார் 7 மாதங்கள் கழித்து திரும்பி வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக இன்ப அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவத்தின் பின்னணி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

man leaves family for 7 months return after lose 63 kgs

Bryan O'Keeffe என்ற நபர் ஒருவர், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இருந்து தொடர்பை துண்டித்து விட்டு, ஸ்பெயினில் உள்ள Mallroca என்னும் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இதற்கு காரணம் என்னவென்றால், ப்ரயான் அதிக எடையுடன் இருந்தது தான். 153 கிலோ எடை கொண்ட அவர், கடந்த 15 ஆண்டுகளாக தனது எடையை குறைக்க உணவு பழக்க முறை, உடற்பயிற்சி உள்ளிட்ட பல முயற்சிகளை கையில் எடுத்துள்ளார். ஆனால், அது எதுவும் ப்ரயானுக்கு கை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அப்போது, புத்தகம் ஒன்றின் அடிப்படையில் தான் ஏன் எடையை குறைக்க முடியவில்லை என்பதை ப்ரயான் உணர்ந்துள்ளார். தனது குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் உணவருந்த வெளியே சென்றால் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு சென்று விடுவார். ஒரு பக்கம் உடற்பயிற்சி மறுபக்கம் அதிக உணவு என இருந்ததால் அதற்கு காரணமாக இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஒதுங்கி இருக்கவும் ப்ரயான் முடிவு செய்திருந்தார்.

அப்படி 7 மாதங்கள் தனியாக இருந்த ப்ரயான், ஒரு நாள் கூட விடாமல் தினமும் உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகளை கையாண்டு வந்துள்ளார். ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை நடப்பதும், அதிக Weight Lifting செய்வதும் என ஒவ்வொரு விஷயத்திலும் கடின உழைப்பை போட்டு வந்துள்ளார்.

இப்படி ஏழு மாதங்களாக ஒரு நாள் கூட விடாத கடின உழைப்பால் தனது உடலை மொத்தமாக மாற்றிக் கொண்ட ப்ரயான், ஏழு மாதங்களில் 63 கிலோவை குறைத்து விட்டு மீண்டும் தனது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை பார்க்கச் சென்றிருந்தார். கொஞ்சம் கூட நம்ப முடியாத வகையில், ப்ரயானை பார்த்து விட்டு அவர்கள் கொடுக்கும் அதிர்ச்சி ரியாக்ஷனையும் அவர் வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

7 மாதங்களில் மிக பெரிய Transforamtion ஒன்றை கடின உழைப்பால் நிறைவேற்றிக் காட்டிய வாலிபர் தொடர்பான வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகம் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் அவரது அர்ப்பணிப்புக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல அவரது மாற்றத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷன் கூட பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது.

Tags : #YOUTH #TRANSFORMATION

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man leaves family for 7 months return after lose 63 kgs | World News.