கிரேன் உதவியுடன்.. கார் மேல பறந்த பைக்.. PRE-WEDDING SHOOT -ஆ இது..? வைரல் ஆகி வரும் வீடியோ..
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், திருமண நிகழ்வு என்பது மிகப் பெரிய ஒரு கொண்டாட்டமாக தான் பார்க்கப்படுகிறது.

மணமக்கள் இருவரும், தங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தொடங்கும் நாளாக திருமணம் இருந்து வருகிறது.
அப்படி ஒரு நாளை வாழ்நாள் முழுவதும் ஒரு உணர்வுள்ள தருணமாக நினைவு கூரும் வகையில் மாற்ற தான் அனைவரும் நினைப்பார்கள்.
இதற்காக, திருமண அழைப்பிதழில் கூட சாதாரணமான கார்டாக இல்லாமல், விமான டிக்கெட் வடிவில், ரேஷன் கார்டு வடிவில் என வித விதமாக டிசைன் செய்து அச்சிட்டு வருகிறார்கள். அதே போல இன்றைய காலத்தில், திருமணத்திற்கு முன்பே எடுக்கப்படும் போட்டோஷூட் மற்றும் வீடியோக்களில் கூட ஒரு புதுமையை அவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அப்படி அடிக்கடி நடைபெறும் வித்தியாசமான திருமண போட்டோசூட் தொடர்பான புகைப்படங்கள் ஏராளம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் திருமணத்திற்கான போட்டோஷூட்டிற்காக வித்தியாசமாக ஜோடி ஒன்று செய்த முயற்சிகள் என குறிப்பிடப்படும் வீடியோ ஒன்று, தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இது தொடர்பாக ட்விட்டரில் வலம் வரும் வீடியோவின் படி, பைக் ஒன்றில் ஒரு ஜோடி அமர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கிரேனின் உதவியுடன் அங்கே நிற்கும் கார் ஒன்றின் மீது பைக் பறப்பது போலவும் கடந்து செல்கிறது. முன்னதாக, பைக் முன்பு கல் ஒன்று இருக்க, அதில் பைக் பட்டு காரை தாண்டி போவது போல பிளானிங்கில் இது படமாகப்பட்டதாகவும் தெரிகிறது. கிட்டத்தட்ட படத்தில் வருவது போலவே காட்சி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், திருமணத்திற்கான போட்டோஷூட் என்றும் அந்த வீடியோவின் கேப்ஷனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண போட்டோஷூட்டிற்காக புதிது புதிதாக யோசித்து இன்று இந்த அளவுக்கு வந்து விட்டார்களா என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். தங்களின் திருமணத்திற்கு கூட இப்படி ஒரு போட்டோஷூட் நடத்த வேண்டும் என்றும் வேடிக்கையாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே வேளையில் இன்னும் சிலர், திருமணத்திற்கான போட்டோஷூட்டா அல்லது வேறு ஏதேனும் குறும்படம் உள்ளிட்ட சமயத்தில் எடுக்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
pre-wedding shoots - i’m getting this pic.twitter.com/Ynwf7Kxr6a
— Best of the Best (@bestofallll) October 27, 2022

மற்ற செய்திகள்
