ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல...மொத்தம் 28 'டெஸ்லா' கார் ஆர்டர் பண்ணிருக்காரு... மொத்த மதிப்பு 11 'கோடி'... குண்ட தூக்கி போட்ட ஆர்டர்!
முகப்பு > செய்திகள் > உலகம்டெஸ்லா நிறுவன கார்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் அதிகமுண்டு. தொழில்நுட்ப ரீதியாக டெஸ்லா கார்கள் அதிகம் மேம்பட்டவையாக இருக்கும் நிலையில், ஜெர்மனியில் நபர் ஒருவர் 28 டெஸ்லா கார்களை ஒரே நேரத்தில் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அந்த நபர், தன்னிடம் இருக்கும் பழைய ஃபோர்டு குகா காரை மாற்றி விட்டு அதற்கு பதிலாக டெஸ்லா மாடல் 3 காரை வாங்க முடிவு செய்துள்ளார். டெஸ்லா இணையதளத்தில் இதற்கான தள்ளுபடி இருந்த நிலையில், இணையதளத்தில் கார் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான படிவத்தை நிரப்பியுள்ளார். படிவத்தை நிரப்பிய பின்னர், கன்ஃபார்ம் பட்டனை அழுத்தியுள்ளார். திரையில் அதுகுறித்த எந்த தகவலும் அப்டேட் ஆகாத நிலையில், தொடர்ந்து சில நேரம் கன்ஃபார்ம் பட்டனை அழுத்தியுள்ளார் அவர். அந்த நபர் 28 முறை கன்ஃபார்ம் செய்த காரணத்தால் 28 டெஸ்லா கார்கள் தவறுதலாக ஆர்டர் செய்யப்பட்டது.
மொத்தம் 28 கார்களுக்கு 1.4 மில்லியன் யூரோக்கள், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 11 கோடி ஆகும். இதைக் கண்ட அந்த நபர் திகைத்து போய் நிறுவனத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். பொதுவாக, டெஸ்லா நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளுக்கு சம்மந்தப்பட்ட நபரிடம் திரும்ப பணத்தை செலுத்தாத நிலையில், அந்த நபர் அளித்த புகாரை கருத்தில் கொண்டு அந்த நபருக்கு பணத்தை திரும்ப அனுப்ப முடிவு செய்தது.
கூடுதலாக கார் ஒன்றிற்கு 100 யூரோக்கள் வீதம் 2,800 யூரோக்கள் அதிகம் திரும்ப அந்த நபருக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
