‘யாரும் வீட்டைவிட்டு வெளிய வரக்கூடாது’.. ‘மீறினால் கடும் அபராதம்’.. முதல்முறையாக பவாரியாவில் லாக்டவுன் உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அவசியம் இல்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தை முடக்கி வைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் குறிப்பிடத்தக்கதாக ஜெர்மனி மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 44 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
#BREAKING Germany's biggest state Bavaria first to order lockdown pic.twitter.com/xsemPCfPPz
— AFP news agency (@AFP) March 20, 2020
இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் முதல்முறையாக லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு இது நீடிக்கும் என்றும், இதனை மீறுபவர்களுக்கு அதிகபடியான அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக தனிமைப்படுத்தப்படும் முதல் மாகாணமாக ஜெர்மனியின் பவாரியா ஆகிறது.