மறைந்த ஷேன் வார்னே-வுக்காக திரண்ட ரசிகர்கள்.. மைதானத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. நெட்டிசன்களை கலங்க வச்ச வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் சிறப்பு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஏற்பாடு செய்தது பலரையும் நெகிழ செய்திருக்கிறது. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த வீடியோ தற்போது அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Also Read | புருஷன் ஊருக்கு போய்ட்டாரு.. ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த மனைவி.. கொஞ்ச நாள்ல நடந்த பயங்கரம்..!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. அந்த அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளிலும் 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள வார்னே இதுவரையில் 1001 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 708 ஆகும். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வார்னே. இவர் கடந்த மார்ச் மாதம் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த சமயத்தில் மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.
அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் வார்னேவுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதனிடையே தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாக்சிங் டே எனப்படும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. அப்போது, உள்ளூர் நேரப்படி மதியம் 3.50 மணிக்கு போட்டி நிறுத்தப்பட்டது. ஷேன் வார்னே தனது வட்ட வடிவிலான தொப்பையை வணக்கம் செலுத்தும் விதமாக காண்பிக்கும் புகைப்படம் அங்கிருந்த பிரம்மாண்ட திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனிடையே, ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் வார்னே எப்போதும் அணியும் வட்ட வடிவிலான தொப்பியை அணிய, ரசிகர்கள் மற்றும் வீரர்கள் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மெல்போர்ன் மைதானத்தில் தான் வார்னே ஆஷஸ் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல தனது 700வது விக்கெட்டையும் வார்னே வீழ்த்தியது இந்த மைதானத்தில் தான். ஆகவே, அவரது இறப்புக்கு பிறகு நடைபெறும் முதல் பாக்சிங் டே மேட்சில் வார்னேவை கவுரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
The King will never be forgotten 👑#AUSvSA pic.twitter.com/tynDnEefZR
— cricket.com.au (@cricketcomau) December 26, 2022

மற்ற செய்திகள்
