1 டிகிரிக்கு சென்ற வெப்பநிலை.. பனிப்பொழிவால் விசித்திரமாக மாறிய கிரிக்கெட் மைதானம்.. வைரல் போட்டோஸ்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபனிப்பொழிவு காரணமாக கிரிக்கெட் மைதானங்கள் பச்சையில் இருந்து நிறமாறி வெண்மையாக காட்சியளிக்கின்றன.

இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானங்களான லார்ட்ஸ் & ஓவல் மைதானத்தில் தான் பனிப்பொழிவு காரணமாக பனி படர்ந்து காணப்படுகின்றன.
இன்று (12.12.2022) பிரிட்டன் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள விமான நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. நகரின் நிலத்தடி ரயில் பயண பாதைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
லண்டனுக்குள் ரயில் சேவைகளை இயக்கும் சவுத் ஈஸ்டர்ன் நிறுவனம், பனியால் ஏற்படும் கடுமையான இடையூறு காரணமாக பயணிகளை பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிப்பொழிவுக்கான மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை பிரிட்டனின் வானிலை மையம் வெளியிட்டுள்ளது. சமீபத்திய முன்னறிவிப்பின்படி, வானிலை -15 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று லண்டன் நகரில் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸில் பதிவாகி உள்ளது. இதன் காரணமாக கியா ஓவல், லார்ட்ஸ், மான்செஸ்டர் மைதானங்கள் பனி சூழ்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன.
ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் டிசம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் என்பதால் பனிப்பொழிவு என்பது அங்கு வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு வருடமும் பிரிட்டனில் பனிப்பொழிவு காரணமாக கிரிக்கெட் & கால்பந்து மைதானங்கள் பனியால் மூடப்படும் நிகழ்வு இயல்பானதாக பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
