“கைல பணமில்லனு வருந்த வேண்டாம்.. கட்டணம்லாம் அப்புறம் பாத்துக்கலாம்!”.. ‘கொரோனாவால்’ வருமானம் இழந்து நிற்பவர்களை குறிவைத்து ‘பாலியல் கும்பலின்’ நூதன விளம்பரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்மலேசியாவில் கொரோனாவால் பெரும்பாலானோர் வேலை, வருமானம், ஊதியத்தை இழந்து தவிக்கும் சூழலில், மலேசியாவில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் கும்பல் ஒன்று இதை புரிந்துகொண்டு வெளியிட்ட நூதன மற்றும் கவர்ச்சிகர அறிவிப்பு, வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. (இணைப்புப் படம்: மாதிரி சித்தரிப்புப் படம்)
மலேசியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களை குறிவைத்து, “கையில் பணம் இல்லை என்று வருந்தவோ தயங்கவோ வேண்டாம். முதலில் எங்கள் சேவையை சுகியுங்கள்... பிறகு கட்டணம் செலுத்திக்கொள்ளலாம்” என்கிற இந்த ரகசிய அறிவிப்பை பரப்பிய கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதாகி உள்ளனர்.
இதையடுத்துமலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இந்தக் கும்பல் இயங்கி சிக்கியுள்ளது. இதில் வியட்னாம், இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 பெண்களும், இந்தக் கும்பலை தம் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கி வந்த 12 ஆண்களும், உள்ளூர் பெண் ஒருவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளனர். கடன் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் என்று சொன்னால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருவார்கள் என்பதுடன், அவர்களை மீண்டும் மீண்டும் வரவழைக்கலாம் என்று கருதிய அக்கும்பலின் நூதன யுக்திதான் இந்த விளம்பரம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு வசதியாக கையடக்க நோட்புக் (Notebook) கருவிகளையும் இக்கும்பல் அவர்களுக்கு வழங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர் தமக்கு பிடித்த பெண்டிரையும், இன்ன பிற தேவைகளையும் தேர்வு செய்துகொண்டு அதற்கான கட்டணத்தை பின்னாட்களில் செலுத்திக்கொள்ளலாம். தவிர, WeChat, Michat, WhatsApp உட்பட சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களிடம் இருக்கும் அழகிகளின் கவர்ச்சிகர்மான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்ந்து வாடிக்கையாளர்களை இந்த கும்பல் ஈர்த்துள்ளது.