'இதுவும் ஒரு நல்ல விஷயம் தான்'... 'வேகமாக பரவும் புதிய வைரஸ் குறித்து'... 'வெளியாகியுள்ள ஆறுதல் தகவல்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்தற்போது புதிதாக பரவி வரும் திடீர்மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் குறித்து ஆறுதல் தரும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பரவிவரும் திடீர்மாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், அதிக வேகமாக பரவக்கூடியது என்ற அச்சம் தரும் தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த மாற்றம் பெற்ற வைரஸ் வேகமாக பரவினாலும் குறைந்த அளவிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தும் என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மூத்த மருத்துவ ஆலோசகராக பணிபுரியும் பால் தம்பையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "சமீபத்தில் பரவிவரும் டி614ஜி எனும் திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவினாலும் குறைந்த அளவிலேயே உயிரிழப்பை ஏற்படுத்தும். இதன்முலம் ஐரோப்பாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், உயிரிழப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளது. திடீர் மாற்றம் பெறப் பெற, பெரும்பாலான வைரஸ்கள் வீரியம் குறைந்தவையாக மாறும். அதிகம்பேரை தொற்றவேண்டும் என்பது வைரஸின் குணமாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் கொல்ல அவை விரும்புவதில்லை. வைரஸுக்கு வாழ இடமும், உணவும் தேவை.
அதாவது உணவுக்காகவும், உறைவிடத்துக்காகவும் மனிதனையே வைரஸ்கள் நம்பியிருப்பதால், அவை மனிதர்களை முற்றாக அழித்துவிட்டால், அவற்றிற்கே உணவும் உறைவிடமும் கிடைக்காது என்பதால், அவை மனிதனை கொல்ல விரும்புவதில்லை. இது ஒரு நல்ல விஷயம் என்றும் கூறலாம்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் வைரஸ்களில் ஏற்படும் திடீர்மாற்றம், அவற்றை அதிக வீரியமுடையவையாக மாற்றுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார மையமும் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
