'இப்ப தான் இந்தியர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்...' - விஞ்ஞானிகள் கூறும் காரணங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமலேசியாவில் பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை வைரஸை இந்திய மக்கள் குறைவாக எடைபோட கூடாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதித்துள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸின் புதிய பிரிவு ஒன்று பரவி வருவதாக செய்தி வெளியாகி வருகிறது.
இந்த புது வகை வைரஸ் சாதாரண கொரோனா வைரஸைக் காட்டிலும் பத்து மடங்கு வீரியம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் தேக்கம் ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.
இந்த புதுவகை வைரஸினால் உலக விஞ்ஞானிகள் குழம்பிப் போயுள்ளனர். டி614-ஜி என்ற இந்த நியூட்ரிசன் மலேசியாவில் 45 பேரை தாக்கியுள்ளது.
மேலும் இந்த வைரஸ் இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக மலேசியா திரும்பிய உணவக முதலாளியால் பரவியதாக கூறப்பட்டு, அந்த நபருக்கு 5 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறிய நோர் ஹிஷாம் அப்துல்லா பொது மருத்துவமனை இயக்குனர், 'கடந்த ஆண்டிலிருந்து பரவி வரும் கொரோனா வைரசிற்கே இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்தவகை கொரோனாவைப் போக்க கடும் சோதனைகள் அவசியம். இதனால் இந்தியர்கள் கொரோனாவை குறைவாக எடை போடக்கூடாது. அனைத்து நாடுகளும் கண்டிப்பாக ஊரடங்கை அலட்சியம் செய்யாமல் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது' எனக் கூறியுள்ளார்.