"என் பையன காணோம் சார்... 2 லட்ச ரூபா பணம் கேட்டு மிரட்டுறாங்க,,." போன் 'கால்' ட்ரேஸ் பண்ணி... 'LOCATION' போன போலீசாருக்கு காத்திருந்த 'ஷாக்கிங்' ட்விஸ்ட்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் (Parganas) மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக, அந்த இளைஞர் பணியிழந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தனது வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரை மோசடி நடைபெற்றுள்ளதாக பெற்றோர்களிடம் கூறியுள்ளார். மேலும், வங்கிக்கு சென்று விசாரித்து வருவதாக கூறி வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், இளைஞரின் தந்தை தனது மகன் காணாமல் போனது தொடர்பாக, போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
அடுத்த சில மணி நேரங்களில் தனது மகனின் மொபைல் போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், உங்களது மகனை கடத்தி வைத்துள்ளதாகவும், 2 லட்ச ரூபாய் கொடுத்தால் மட்டுமே மகனை விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். அதே நாளில் மீண்டும் இளைஞரின் தந்தைக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது, பேசுபவரின் சத்தத்தைக் கேட்ட தந்தைக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து, அந்த இளைஞரின் செல்போன் சிக்னல் மூலம் இளைஞர் எங்கு கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, அங்கு சென்று ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஊரடங்கு காரணமாக வேலையிழந்ததால், தனது தந்தையிடம் பணத்தை பெற வேண்டி அந்த இளைஞரே தான் கடத்தப்பட்டது போல நாடகமாடியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.