"பொங்கி எழுந்த 100 கம்பெனிகள்!".. ரூ. 4.2 லட்சம் கோடி இழந்த பின்.. 'பேஸ்புக்' அதிபர் எடுத்த முடிவு!
முகப்பு > செய்திகள் > உலகம்சமூக வலைதளமான பேஸ்புக்கில் பலரும் பழைய செய்தி, பழைய கட்டுரை என தெரியாமலே பகிர்ந்து வருவதை தடுக்கும் வகையில் பல மாதங்களாக பகிரப்படும் செய்திக் கட்டுரைகளின் வெளியிடப்பட்ட தேதி, காலகட்டம் உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது பேஸ்புக்.
மேலும் தவறான செய்திகள், போலியான செய்திகள், பழைய செய்திகள், வன்மத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் பொய் செய்திகள் உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில், இவை தொடர்பான நோட்டிபிகேஷன் வருமாறு அமைத்து சோதித்து இருந்தது பேஸ்புக். இந்தநிலையில் 90 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரையை பகிர முயற்சிக்கும் ஒரு பயனாளர்கள், இது பழைய செய்தி என்கிற நோட்டிபிகேஷனைக் காண முடியும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
இன்னொருபுறம் பேஸ்புக்கிற்கு எதிராக பல நிறுவனங்கள் பொங்கி எழுந்ததை எடுத்து அந்த நிறுவனம் 4.2 லட்சம் கோடி ரூபாயை இழப்பதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பேஸ்புக் மூலம் முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து கோகோ-கோலா, ஹோண்டா, யூனிலீவர் உள்ளிட்ட முக்கியமான 100 நிறுவனங்கள் பேஸ்புக்கில் இனி நீ விளம்பரம் செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. இதற்கு காரணம் ஃபேஸ்புக் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்துவது இல்லை என்றும், பொய்யான தகவல்களை பேஸ்புக் கட்டுப்படுத்த தவறுவதாகவும் வன்முறையை தூண்டும் வகையிலான போஸ்ட்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் பேஸ்புக் எடுப்பதில்லை என்பதும்தான் என இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.
குறிப்பாக கருப்பினத்தவராகக்கூறி அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் பிளாய்டு கொலை தொடர்பாக டிரம்ப் போட்ட பேஸ்புக் பதிவும் இதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது. இதனால் பேஸ்புக்கின் பங்குகள் 8.3 சதவீதம் சரிந்து இருப்பதாகவும் பேஸ்புக் 4.2 லட்சம் கோடி ரூபாய் இழந்துவிட்டதாகவும், அந்நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் 54,000 கோடியை இழந்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் என்கிற பட்டியலில் இருந்து இதனால் மார்க் ஜூக்கர்பெர்க் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் பொய் செய்திகள், வெறுப்பு பேச்சுகள், சர்ச்சை கருத்துக்கள் உள்ளிட்டவற்றை வார்னிங் நோட்டிபிகேஷனுடன் மக்கள் பார்க்க முடியும் என்றும், அதை படிப்பதா, அதற்குரிப்போர்ட் அடிப்பதா என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள் என்றும் மார்க்க அதிரடியாக அறிவித்துள்ளார். இதில் ட்ரம்பின் போஸ்ட்களும் அடங்கும் என்று சொல்லியிருக்கும் பேஸ்புக் அதிபர், அவற்றுள் முக்கியமான தேர்தல் போஸ்ட்கள் என்றால் அதை நீக்காமல் வெறும் விதிகளை மீறும் போஸ்ட் என்று வார்னிங் லேபிள் இடப்படும் என்றும், அதன் மீது மக்கள் விவாதத்தை நடத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.