‘இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனை’!.. மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த கோலி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஎந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்து அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விளையாட்டு பிரபலங்களில் ஒருவர். தற்போது இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 100 மில்லியனை ( 10 கோடி) கடந்துள்ளது. இந்தியாவில் 100 மில்லியன் பாலோயர்களை பெற்ற ஒரே பிரபலம் விராட் கோலி தான். அதேபோல், உலக அளவில் 100 மில்லியன் பாலோயர்களை எட்டிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
இந்தியாவில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக பாலோயர்களை (60 மில்லியன்) கொண்ட பிரபலமாக நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை தீபிகாபடுகோன் ஆகியோர் உள்ளனர்.
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களை கொண்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரோனால்டோ (500 மில்லியன்) உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் கால்பாந்தாட்ட வீரர்கள் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் உள்ளனர். இந்த வரிசையில் விராட் கோலி 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.

மற்ற செய்திகள்
