இந்திய உணவை டேஸ்ட் செய்த ஆஸ்திரேலிய சிறுமி... அந்த ரியாக்ஷன் தான் செம்ம..க்யூட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது வாழ்வில் முதல் முறையாக இந்திய முறைப்படி தயார் செய்யப்பட்ட உணவை சுவைத்துப் பார்த்த சிறுமியின் வீடியோ வைரலாக இணையதளங்களில் உலா வருகிறது.

இந்திய உணவு
இந்தியாவை பொதுவாக துணைக்கண்டம் என்றே அழைக்கின்றனர். இதற்கு காரணம் பல்வேறு வகையான நில அமைப்புகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், உணவு பழக்கவழக்கங்கள் இந்தியாவில் இருக்கின்றன. எல்லாம் தாண்டி பொதுவாக நாம் இந்தியர் என்று அடையாளப் படுத்தப்படுவது போல் நம்மிடையே இன்னொன்றும் பொதுவாக இருக்கிறது. அது நமது உணவு. இந்தியர்கள் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை உள்ள மக்கள் அனைவரும் மசாலா பிரியர்களோகவே உள்ளனர்.
அதேபோல, அனைத்து உணவு பொருட்களையும் காரத்துடன் சமைத்து சாப்பிட்டே பழகிய நம்மால் பிற நாடுகளின் உணவுகளை ஏற்றுக்கொள்வது மிகுந்த சவாலான காரியமாகிவிடுகிறது. இதனாலேயே, பூமியில் எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியர்கள் நம்முடைய நாட்டினர் யாராவது உணவகம் வைத்திருக்கிறார்களா எனத் தேடித் தொடங்கிவிடுகின்றனர்.
ஆஸ்திரலிய சிறுமி
இது ஒரு பக்கம் என்றால், வெளிநாட்டினர் நம்முடைய காரமான உணவுகளை சாப்பிட்டால் பலருக்கும் கும்பி பாகம் தான். அந்த வகையில் இந்திய முறைப்படி செய்த, உணவுகளை சாப்பிட்டுவிட்டு ஆஸ்திரேலிய சிறுமி ஒருவர் கொடுத்த ரியாக்ஷன் தான் தற்போது பலரையும் ஈர்த்துள்ளது.
வைரல் வீடியோ
ரேச்சல் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள இந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிறுமி இந்திய முறைப்படி சமைக்கப்பட்ட கடாய் சிக்கன் மட்டும் மாம்பழ குல்பி ஆகியவற்றை சாப்பிடுகிறார். அப்போது அந்த சிறுமி மிகுந்த ஆர்வத்துடன் உணவுகளை டேஸ்ட் செய்கிறார். கடைசியாக சீரகத்தை அந்த உணவக உரிமையாளர்கள் கொடுக்க, துறுதுறுவென இருந்த சிறுமி அதை சாப்பிட்டுவிட்டு பற்களை கடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்ளும் ரியாக்ஷனுக்கு ஹார்டின்களை அள்ளி வீசிவருக்கின்றனர் நெட்டிசங்கள்.
இந்திய முறைப்படி தயாரித்த சிக்கன் மற்றும் மாம்பழ குல்பியை சாப்பிட்டு ஆஸ்திரேலிய சிறுமி கொடுத்த இந்த ரியாக்ஷன் வீடியோவை இதுவரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
