'மொதல்ல ஒருத்தர் மயக்கம் போட்டு வந்தார்...' 'அவர போலவே 50 பேர் அடுத்தடுத்து வந்தாங்க...' என்ன நடந்தது...? - அதிர்ச்சியடைந்த டாக்டர்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 26, 2021 06:18 PM

 

Uttar Pradesh, the incident of poisoning at a wedding party

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் அடுத்த மஹ்முதாபாத்தில் நேற்றிரவு நடந்த திருமண விழா நடைபெற்றுள்ளது. அதன்பின் விருந்தினர்களுக்கு உணவு அளிக்கப்பட்டபின் அதை சாப்பிட்டவர்களில் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மயக்கமடைந்த உறவினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் அங்கிருந்தவர்கள். அதன்பின் மீண்டும் அதே போல 50 பேர் வரை அதே பிரச்சனை காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கூறிய அவசரசிகிச்சை பிரிவு மருத்துவர் அன்வர் கூறுகையில், 'நேற்று நடைபெற்ற அந்த திருமணவிழாவில் சாப்பிட்ட ஒருவர் மயக்கமடைந்த நிலையில் இரவு 11 மணியளவில் மருத்துவமனைக்கு வந்தார். அதன்பின் சொல்லிவைத்தார் போல அவரை போலவே பின்னர் அடுத்தடுத்து 50 பேர் வரை அதே பிரச்னைகாரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சையின் போது அனைவரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது' எனக் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் திருமண ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் அதிருப்தி அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Uttar Pradesh, the incident of poisoning at a wedding party | India News.