6 வருசத்துக்கு அப்றம் ஐபிஎல் ஆடும் பிரபல வீரர்!!.. 'CSK' அணிக்கு எதிராக பெரிய பிளான் போட்ட PBKS??..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், பாதிக்கு மேற்பட்ட லீக் போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளுக்கும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.
மீதமுள்ள 7 போட்டிகளில், ஆறு போட்டிகளிலாவது வெற்றி பெற்றால் தான், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் ஏற்படும் என தெரிகிறது.
இதனால், அனைத்து போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை அணி உள்ளது. அப்படி ஒரு நிலையில், இன்று (25.04.2022) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தற்போது சிஎஸ்கே ஆடி வருகிறது.
பஞ்சாப் அணியில் நடந்த மாற்றங்கள்
இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணி மும்பைக்கு எதிராக ஆடிய அதே அணியுடன் களமிறங்கியது. மறுபக்கம், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷாருக்கான், எல்லிஸ் மற்றும் அரோரா ஆகியோருக்கு பதிலாக, பனுகா ராஜபக்சே, சந்தீப் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
6 வருசத்துக்கு அப்றம் 'IPL' மேட்ச்
தொடர்ந்து, பஞ்சாப் அணி தற்போது பேட்டிங்கும் செய்து வருகிறது. இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளது பற்றி ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கருத்து பகிர்ந்து, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்திய வீரரான ரிஷி தவான், கடைசியாக 2016 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி இருந்தார்.
இதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ரிஷி தவானுக்கு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் ஆடாமல் இருந்து வந்த ரிஷி, ரஞ்சி தொடர் மற்றும் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் தொடர்ந்து ஆடி வந்தார். இதில், 2021 - 22 விஜய் ஹசாரே கோப்பையை, ரிஷி தவான் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அணி, தமிழ்நாடு அணியை இறுதி போட்டியில் வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.
பேட்டிங் மற்றும் பவுலிங்
இந்த தொடரில், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ரிஷி தவான் பட்டையைக் கிளப்பி இருந்தார். ரிஷி தவானை பஞ்சாப் அணி, இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 55 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்தது. இதுவரை எந்த போட்டிகளிலும் அவர் களமிறங்காத நிலையில், இன்று சென்னை அணிக்காக பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில், ரிஷி தவான் களமிறங்கி உள்ளது, பஞ்சாப் அணிக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய முதல் லீக் போட்டியில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8