‘நாங்க என்ன ஆர்டர் பண்ணோம்... நீங்க என்ன டெலிவரி பண்ணிருக்கீங்க’!.. ‘எங்க குடும்பமே மன உளைச்சல்ல இருக்கோம்’.. ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உணவகம் மீது வழக்கு தொடர்ந்த பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு கோடி ரூபாய் இழப்பீடு வேண்டி, பீட்சா உணவகம் மீது பெண் ஒருவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Woman gets non-veg pizza, seeks Rs 1 crore compensation Woman gets non-veg pizza, seeks Rs 1 crore compensation](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/woman-gets-non-veg-pizza-seeks-rs-1-crore-compensation-1.jpg)
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் தீபாலி தியாகி (Deepali Tyagi). இவர் பீட்சா உணவம் ஒன்றின் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல பீட்சா உணவகத்தில் சைவ பீட்சா ஆர்டர் செய்தோம். அன்று ஹோலி பண்டிகை, பசியில் இருந்த குடும்பத்தினர் அந்த பீட்சாவை சாப்பிட்டபோதுதான், அது “அசைவ பீட்சா” என்பது தெரியவந்தது. இதுகுறித்து உணவகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒரு வாரத்துக்குப் பின், அந்த நிறுவனத்தின் மேலாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இலவசமாக சைவ பீட்சா தருவதாக கூறினார். நாங்கள் மத ரீதியிலும், குடும்ப பாரம்பரியத்தின் அடிப்படையிலும், தனிப்பட்ட முறையிலும், சைவ உணவு பழக்கம் உடையவர்கள். அசைவ பீட்சாவை அனுப்பியதோடு, புகார் கொடுத்தும் அதை ஒரு பெரிய விஷயமாக பார்க்காமல், பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ளனர். இதனால் எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சல் அடைந்துள்ளனர்’ என தீபாலி தியாகி குறிப்பிட்டுள்ளார்.
மேலு அசைவ உணவால் தங்களது மத வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் கெடுத்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தீபாலி, செய்த தவறை திருத்திக்கொள்ள பல லட்சம் ரூபாய் செலவுள்ள சடங்குகளை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உணவகம் 1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என நுகர்வோர் நீதிமன்றத்தில் தீபாலி தியாகி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தீபாலி தொடர்ந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி பீட்சா உணவகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)