
வயித்தெரிச்சலா இருக்கு சார்...! 'இந்த கோழிங்க தின்றதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன், இப்போ எல்லாம் வேஸ்டா போச்சு...' 'வினோத புகாரோடு போலிஸ் ஸ்டேஷன் வந்த நபர்...' - ஆடிப்போன போலீசார்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழி முட்டை போடவில்லை என விவசாயி ஒருவர் போலீஸில் புகார் அளித்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனே மாவட்டம் லோனிகால்பர் தாலுகா ஆலந்தி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் வளர்க்கும் கோழிகளுக்கான தீவனம் அப்பகுதியில் புதிதாக திறந்திருக்கும் தீவனமண்டியிலிருந்து கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் நிறைய வாங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரம் அந்த தீவனத்தை கோழிகளுக்கு போட்டு வந்ததில், கோழிகள் தீவனத்தை மட்டும் வயிறுமுட்ட சாப்பிட்டு வந்து முட்டைகளை மட்டும் போடவேயில்லை.
கோழியின் இந்த அசாதாரண நிலையை கண்டு வேதனை அடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர், தீவனம் விற்பனை செய்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார். ஆனால் அவர்களோ எந்த வித ஈடுபாடும் காட்டாமல், சரிவர பதிலளிக்காமலும் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோழிப்பண்ணை உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரில் கோழித்தீவனத்தை தின்ற பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளதும் குறிப்பிடதக்கது. இதனை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழித்தீவன நிறுவனத்திடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மற்ற செய்திகள்
