"நாய் மாதிரி மாறியே ஆகணும்.." மனிதனின் வினோத ஆசை.. 12 லட்ச ரூபாய் செலவு.. வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்
முகப்பு > செய்திகள் > உலகம்இந்த உலகில் மனிதர்கள் பலரும், சில இயல்பான கனவுகளுடன் அதனை அடையும் பொருட்டு, வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள்.

Also Read | உலகத்தின் குறைவான உயரம் கொண்ட இளைஞர்.. இவருக்கு இவ்ளோ வயசா..? கின்னஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!
அதில், சிலருக்கு தோன்றும் விருப்பம் என்பது, நாம் நினைத்து கூட பார்க்க முடியாத வினோத ஆசையாக கூட இருக்கலாம்.
அப்படி ஒரு நபர், வித்தியாசமாக மாற வேண்டும் என நீண்ட நாட்களாக கனவு கண்டு, இறுதியில் அதற்கான முயற்சியிலும் இறங்கி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
நாய் போன்ற உடை
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தன்னை நீண்ட நாட்களாக ஒரு நாய் போல மாற்றி, உடை அணிந்து பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வேண்டி, நாய் போல உடை ஒன்றை அவர் உருவாக்க முடிவு செய்து, அதனை அணிந்து பார்த்துள்ளார். இது தொடர்பாக வெளியான தகவலின் படி, திரைப்படங்களுக்கு ஆடைகள் உருவாக்கும் நிறுவனம் ஒன்றின் மூலம், 'Collie' என்ற நாய் போன்ற உடையை தயாரிக்க கோரிக்கை வைத்துள்ளார். அதே போல, தான் மனிதன் என்பது தெரியாத அளவுக்கு அதனை உருவாக்க வேண்டும் என்றும் அந்த நபர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
விலை மட்டும் இவ்வளவா?
இதற்காக, அந்த நிறுவனம் சுமார் 40 நாட்களை எடுத்துக் கொண்டு, அந்த நாய் போல ஆடையை உருவாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்த Collie நாய் உடையின் விலை, 12 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. அந்த நபர், நாய் உடையை அணிந்து கொண்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
வியப்பில் மக்கள்
இதனைக் கண்ட பலரும், அவர் நிஜத்தில் பார்ப்பதற்கு நாய் போல இருப்பதாகவும் வியப்புடன் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய அந்த நபர், தனக்கு விருப்பமான நாயின் உடையை தயார் செய்து அணிந்தேன் என்றும், ஒரு பெரிய விலங்கை தேர்வு செய்தால், பார்ப்பதற்கு நிஜமாக இருக்கும் என்பதால் இந்த நாயை தேர்வு செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும் பலரும், அப்படியே அச்சு அசலாக நாய் போல இருப்பதால், அவர் நிஜத்தில் மனிதர் தானா என ஆச்சர்யத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read | வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. திடீரென மயங்கி விழுந்து நேர்ந்த சோகம்..!

மற்ற செய்திகள்
