'ரைடு' போன 6 பேருக்கும் 'ஒரே' பிரச்சனை...! 'உலகின் அதிபயங்கர ரோலர் கோஸ்டர் இது...' - 'விஷயம்' தெரிஞ்ச உடனே எடுத்த அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகில் மிகவேகமான, அதிகம் பேர் பயணிக்க விரும்பும் தொ-தொதோன்போ எனும் ராட்சச ரோலர் கோஸ்டர் தற்காலிகமாக மூடப்படுவதாக ஜப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜப்பானில் யமான்ஷி மாகாணத்தில் உள்ள பியூஜியோஷிடா எனும் பகுதியில் பியூஜி-கியூ ஹைலாந்து எனும் பொழுதுபோக்கு பூங்காவில் உலகின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரான தொ-தொதோன்போ ரோலர் கோஸ்டர் இயங்கி வருகிறது.
இந்த ராட்சத ரோலர் கோஸ்டர் சான்சே டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2001 டிசம்பர் 21-ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
அதன்பின் உலகிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் என்ற புகழுடன் இருக்கும் இந்த ரோலர் கோஸ்டரில் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து வரும் மக்கள் பயணம் செய்து வந்தனர். இது 1.8 நொடிகளில் 172 கிமீ எனும் அசுர வேகத்தில் செல்லக் கூடியது.
இந்நிலையில் தற்போது தொ-தொதோன்போ ரோலர் கோஸ்டரில் பயணம் செய்த சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின் பயணித்த சுமார் 6 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக தான் தற்போது தொ-தொதோன்போ ரோலர் கோஸ்டர் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டு, காயம் அடைந்த 6 பேரிடமும் சான்சே டெக்னாலஜிஸ் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் ரோலர் கோஸ்டர் காதலர்களுக்கு பெருத்த இடியாக அமைந்துள்ளது. அதோடு, இதுகுறித்து கூறிய மருத்துவ நிபுணர்கள் ரோலர் கோஸ்டரில் பயணிக்கும் சிலருக்கு திடீரென கிடைக்கும் ஆக்ஸிலரேஷன் காரணமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.