சுட்டிக் குழந்தையுடன் போட்டி போட்டுக்கொண்டு பாடும் செல்ல நாய்.. வைரலான செம க்யூட் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது செல்ல நாயுடன் சிறுமி ஒருவர் பாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | அன்லிமிட்டட் சாப்பாடு.. அதுவும் இந்த விலையில .. வயதான தம்பதியின் லட்சிய வாழ்க்கை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
மனிதர்கள் பலருக்கும் நாய் வளர்ப்பது மிகவும் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. எப்போதும் நம்முடனே இருக்க நினைக்கும் இந்த உயிர்கள் தனிமைகளை போக்கிவிடுகின்றன. வாலை ஆட்டிக்கொண்டு நம்முடைய செல்ல கண்டிஷன்களுக்கு கட்டுப்பட்டு இடையில் சேட்டைகளிலும் ஈடுபடும் நாய்களை பலரும் தங்களது உறவாகவே கருதுகின்றனர். அந்த வகையில், தனது செல்ல நாயுடன் சிறுமி ஒருவர் டேவிட் கரெட்-ன் சிம்பொனியை பாடும் க்யூட் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டேவிட் கரெட்
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டேவிட் கிறிஸ்டியன் போங்கார்ட்ஸ் பிரபல வயலின் இசையமைப்பாளர் ஆவார். இசைத்துறைக்கு வந்த பிறகு தனது பெயரை டேவிட் கரெட் என அவர் மாற்றிக்கொண்டார். தனது 11 வயது முதல் வயலினை இசைத்துவரும் இவர் கிளாஸிக்கல் இசையில் வல்லவராக கருதப்படுகிறார். இதன் காரணமாகவே உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் டேவிட் இசைத்த பிட்டர் ஸ்வீட் என்னும் சிம்பொனியை தான் இந்த குழந்தையும் அவரது செல்ல நாயும் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை சிறுமி பாடும்போதும், அந்த நாயும் தனக்கே உரித்தான முறையில் ஊளையிடுகிறது. இந்த வீடியோ இதுவரையில் 1.2 மில்லியன் முறை பார்க்கப்பட்டிருக்கிறது.
தெறிக்கும் கமெண்ட்கள்
இந்த வீடியோவை கண்டதும் நெட்டிசன்கள் ஹார்டின்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். மேலும், "அந்த நாய் அனைத்து நோட்ஸ்-களையும் தெளிவாக உச்சகரிக்கிறது" என்றும், "இந்த நிகழ்ச்சிக்கு எங்கே டிக்கெட் விற்கப்படும்?" எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
தனது செல்ல நாயுடன் சிறுமி ஒருவர் பாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8