என் உயிர் போனாலும் பரவாயில்ல.. எஜமானர் குடும்பத்துக்கு எதுவும் ஆக கூடாது.. நாய் எடுத்த ரிஸ்க்.. நெகிழ வைக்கும் சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 08, 2022 02:09 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் இரவில் வீ்ட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வீட்டில் வளர்த்த நாய் தன் உயிரை பணயம் வைத்து பாம்பை கடித்து கொன்று எஜமானரின் குடும்பத்தையே காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

a dog saved the master from the snake in Pondicherry

கணவரை போட்டு தள்ளிட்டு.. அடிக்கடி தன்னோடு போனில் பேசுவதாக கூறி வந்த மனைவி.. 11 வருடங்கள் கழித்து தெரிய வந்துள்ள உண்மை

வீட்டில் வளர்த்து வந்த ராட் வீலர் வகையை சேர்ந்த 2 நாய்கள்:

மனிதர்கள் வளர்க்கும் பிராணிகளில் நாய் மிகவும் பாசமாக இருக்கும். பழகி விட்டால் மனிதர்கள் மீது எக்கச்சக்கமாக அன்பை வைத்து அவர்கள் காலையே சுற்றி வரும்.

புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகின்றார் அரசு கல்வித்துறை அதிகாரி ரமணி. இவரது மனைவி சித்ரா காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டில் வெளிநாட்டு வகை நாய்களான ராட் வீலர் வகையை சேர்ந்த 2 நாய்களை வளர்த்து வந்தனர். அவற்றுக்கு லெனி, மிஸ்ட்டி என பெயரிட்டு அழைத்தனர்.

திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு:

இந்தநிலையில் மிஸ்ட்டி என்ற நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு  ஏற்பட்டதால் ரமணி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அந்த நாய்க்கு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தும் நாய் சோர்வுடனே இருந்து வந்தது. இந்தநிலையில் ரமணி தனது வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு சுமார் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு  செத்து கிடந்ததைப் பார்த்தது அதிர்ச்சி அடைந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம்:

இப்போது வீட்டுக்குள் செல்ல வந்த அந்த பாம்புடன் மிஸ்ட்டி போராடி கொன்று இருப்பதும் பாம்பு கடித்து விஷம் ஏறியதால் நாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணமும் அப்போது தான் அவருக்கு தெரியவந்தது. உடனே அந்த நாயை புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது நாய் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் வீட்டுற்குள் செல்ல இருந்த பாம்பிடம் போராடி பாம்பை கடித்து குதறி கொன்று தன்னை வளர்த்த உரிமையாளர்களின் உயிரை காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஊருக்கெல்லாம் பொண்ணு தரமாட்டோம்.. கிட்டத்தட்ட 50 பேரு 45 வயசாகியும் திருமணம் ஆகாம இருக்காங்க.. என்ன காரணம்?

Tags : #DOG #SAVED THE MASTER #SNAKE #PONDICHERRY #நாய் #புதுச்சேரி

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. A dog saved the master from the snake in Pondicherry | India News.