தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு.. மாணவிக்கு நேர்ந்த துயரம்..சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் இறைச்சி துண்டு தொண்டையில் சிக்கியதால் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை .. இவ்வளோ திட்டங்கள் இருக்கா..? முழு விபரம்.!
மாணவி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே உள்ள செத்தலூரை சேர்ந்தவர் ஆஷிக். இவருடைய மனைவி பாத்திமா ஹானான். 22 வயதான இவர் அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்துவந்தார். இந்நிலையில், நேற்று செநதலூரில் உள்ள தங்களது வீட்டில் ஆஷிக் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென ஹானானின் தொண்டையில் மாமிச துண்டு ஒன்று சிக்கியது. இதனால் தவித்த ஹானான், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்திருக்கிறார்.
சிக்கிய மாமிச துண்டு
எவ்வளவு முயற்சித்தும் ஹானானால் தனது தொண்டையில் சிக்கிய மாமிச துண்டை வெளியே எடுக்க முடியவில்லை. இதனிடையே மாமிச துண்டு ஹானானின் மூச்சுக்குழாய்க்குள் சென்றதால் மூச்சு விடமுடியாமல் தவித்திருக்கிறார் அவர். இதனைக்கண்ட ஆஷிக் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு ஹானானை அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
இதன்படி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஹானான் சேர்க்கப்பட்டார். மாணவியின் தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டை அகற்ற மருத்துவர்கள் போராடினர். ஆனாலும், ஹானான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த செத்தலூர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவருடன் சாப்பிடும்போது, தொண்டையில் இறைச்சி சிக்கியதால் மாணவி உயிரிழந்த சம்பவம் கேரள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேபோல நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காவலர் ஒருவர் மதிய உணவு சாப்பிடும்போது, தொண்டைக்குள் உணவு சிக்கியது. இதனால் துடித்துப்போன காவலருக்கு காவல் உதவி ஆய்வாளர் உடனடியாக முதலுதவி செய்து காவலரின் உயிரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.