வெள்ளியங்கிரி மலையேறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.. திடீரென மயங்கி விழுந்து நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 26, 2022 03:27 PM

வெள்ளியங்கிரி மலை ஏறிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai High Court lawyer dies in Velliangiri hills

Also Read | தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு.. மாணவிக்கு நேர்ந்த துயரம்..சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்..!

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 55). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர் ராமமூர்த்தி என்பவருடன் இளஞ்செழியன் சென்னையில் இருந்து கோவைக்கு வந்துள்ளார்.

பின்னர் இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறி, 7-வது மலையில் உள்ள சுயம்புலிங்க ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு கீழே இறங்க தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

Chennai High Court lawyer dies in Velliangiri hills

அப்போது 6-வது மலையில் வந்த போது, தனக்கு உடல்நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், மாலை 5-வது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயம் மலையேற்றத்திற்காக வந்த மருத்துவர் ஒருவர் இளஞ்செழியனை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு நண்பர் ராமமூர்த்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இளஞ்செழியனின் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read | "10-வது கூட பாஸ் பண்ணலையேன்னு ரொம்ப கவலைப்பட்டிருக்கேன்".. அப்பாவுக்கு பயிற்சி அளித்த மகன்.. பரீட்சை ரிசல்ட்டை பார்த்து திகைச்சு போன உறவினர்கள்..!

Tags : #CHENNAI #CHENNAI HIGH COURT LAWYER #VELLIANGIRI HILLS #வழக்கறிஞர் #வெள்ளியங்கிரி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai High Court lawyer dies in Velliangiri hills | Tamil Nadu News.