ஆபிஸ் நேரத்தை விட ‘2 நிமிஷம்’ முன்னாடியே கிளம்புனதுக்கு இப்படியொரு தண்டனையா.. ‘ஷாக்’ ஆன ஊழியர்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Mar 18, 2021 09:40 AM

அரசு ஊழியர்கள் 2 நிமிடத்துக்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதற்காக, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது.

Japan govt workers punished with pay cut for leaving work 2 mins early

ஜப்பான் நாட்டின் சிபா நகரின் உள்ள புனபாஷி நகர கல்வி வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மீது கடந்த மார்ச் 10-ம் தேதி சம்பளக் குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக ‘Japan Today’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதேபோல் The Sankei News வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஊழியர்கள் வேலை முடிந்து வெளியேறும் நேரம் மாலை 5.15 ஆக உள்ள நிலையில் அவர்கள் 5.13 மணிக்கே வெளியேறியுள்ளனர்’ என குறிப்பிட்டுள்ளது.

Japan govt workers punished with pay cut for leaving work 2 mins early

இதுகுறித்து கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளதாக The Sankei News செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,‘கடந்த 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரையிலான கால இடைவெளியில் 7 ஊழியர்கள் 316 முறை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 2 நிமிடங்கள் முன்னதாக கிளம்புவதற்காக காரணம் என்ன? என ஊழியர்களிடம் கேட்ட போது, 5.17 மணிக்கு வரும் பேருந்தை தவறவிட்டால், அதன் பின்னர் 5.47 மணிக்கு வரும் பேருந்தில்தான் செல்ல முடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Japan govt workers punished with pay cut for leaving work 2 mins early

அலுவலக நேரத்தை விட 2 நிமிடங்கள் முன்னதாக சென்ற இரண்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், 4 நபர்களுக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் செயல்பட்ட 59 வயது பெண் ஊழியரின் சம்பளத்தில் வரும் காலத்தில் பத்தில் ஒரு பங்கு குறைக்கப்பட்ட உள்ளது’ என புனபாஷி நகர கல்வி வாரியம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவல நேரத்தை விட 2 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு சம்பளக் குறைப்பு செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Japan govt workers punished with pay cut for leaving work 2 mins early | World News.