'தொடர்ந்து நடக்கும் மரணம்'...'ஆனா இத்தாலி நிம்மதி அடைய ஒரு காரணம் இருக்கு'... வெளியான தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக சற்று நிம்மதி அடைந்துள்ளது. அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், சீனாவை சின்னாபின்னமாக்கியது. அதன் பிறகு அதன் பார்வை ஐரோப்பிய நாடுகளுக்கு திரும்பிய நிலையில், அங்கு அது கோர தாண்டவம் ஆட தொடங்கியது. அதன் சூழலில் சிக்கிய முதல் நாடு இத்தாலி. அந்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 577 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 849 ஆக உள்ளது.
இதற்கிடையே உலக அளவில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இத்தாலி உள்ளது. ஆனால் அங்கு தற்போது நிலைமை சற்று மாற தொடங்கியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 570 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கிடையே இத்தாலியில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்து வந்தாலும், கடந்த சில நாட்களாககொரோனாவுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இது அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சற்று நிம்மதியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.