'இதற்கு' மட்டுமே விதிவிலக்கு... மலைக்கோட்டை நகரத்துக்கு 'கடுமையான' கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 11, 2020 04:10 AM

ஊரடங்கு நேரத்தில் மக்கள் விதிமுறைகளை மதிக்காமல் வெளியே சுற்றுவதால் நாள்தோறும் புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி மாநகர காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Trichy Police given permission people for Only one Kilometer

அதன்படி இனிமேல் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் 1 கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மீறி வெளியே வந்தால் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.

இந்த அறிவிப்பில் இருந்து மருந்து பொருட்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி கடைகள் செயல்பட திருச்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.