‘8 நிமிடங்கள் 46 விநாடிகளில் மரணம்...' '5 அடி' தூரத்திலிருந்து ஜார்ஜ் இறப்பதை 'பார்த்தேன்...' 'வீடியோ எடுத்த சிறுமி விளக்கம்...'
முகப்பு > செய்திகள் > உலகம்ஜார்ஜ் பிளாய்ட்டின் கடைசி விநாடிகள் தொடர்பான வீடியோவை எடுத்த சிறுமி டார்னெல்லா ஃப்ரேஸர் தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த மே 25ம் தேதி மின்னிபொலிஸ் நகரில் கடை ஒன்றுக்கு சிகரெட் வாங்க சென்றார் ஜார்ஜ் பிளாய்ட். அதற்கு 20 டாலர் பணத்தை அவர் கொடுத்துள்ளார். போலி டாலர் என நினைத்த கடைக்காரர் உடனடியாக போலீசாருக்கு ஃபோன் செய்து விடுகிறார்.
அடுத்த விநாடி அங்கு 4 போலீஸ் காரர்கள் காரில் வந்து இறங்கினர். அவர்களில் டெரக் சோவீன் என்பவர் காரை விட்டிறங்கிய வேகத்தில் ஜார்ஜ் பிளாயிட்டை குப்புற படுக்க வைத்து முழங்கையை பின்னால் கட்டி கழுத்தில் தன் முட்டியை வைத்து அழுத்துகிறார்.
ஜார்ஜ் பிளாயிட் "என்னால் மூச்சு விட முடியவில்லை" என்று முனகினாலும் அந்த போலீஸ் அதிகாரி கழுத்திலிருந்து தனது முட்டியை எடுக்கவே இல்லை. அருகிலிருந்த போலீஸ்காரர்களும் தடுக்கவே இல்லை. சுமார் 8 நிமிடம் 48 விநாடிகளில் ஜார்ஜ் பிளாயிட் தன் உயிரை இழந்து விட்டார்.
இந்த சம்பவத்தை அப்படியே பதிவு செய்த சிறுமி டார்னெல்லா அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கொதித்துப் போயினர். இந்த கொலைக்கு எதிர்ப்பு தெரிவத்து அமெரிக்காவே பற்றி எரிகிறது.
ஆனால் இணையத்தில் டார்னெல்லாவை ஏராளமானோர் விமர்சனமும் செய்தனர். "நீ ஏன் அவரை காப்பாற்ற செல்லவில்லை" என கேள்விக் கணைகளை தொடுத்தனர்.
தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு டார்னெல்லா மீடியா வழியாக பதிலளித்துள்ளார். " நான் மைனர் பெண். அங்கே நடந்த சம்பவங்கள் என்னை பயமுறுத்திவிட்டன. என்னால் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அந்த போலீசாரை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என நினைக்கிறீர்களா?. ஜார்ஜ் இறப்பதை நான் ஐந்தடி தொலைவிலிருந்து பார்த்தேன். அது மிக மோசமான சம்பவம். என் நிலையிலிருந்து பார்த்தால் தான் அதை உணர முடியும்" என்று பதிலளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
