'அமெரிக்காவில்' மறுபடியும் ஒரு 'தாக்குதலா?...' 'நிலைகுலைந்து விழுந்த கறுப்பின பெண்...' 'பணியிடை நீக்கம்' செய்யப்பட்ட 'காவல்துறை அதிகாரிகள்...'
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பினப் பெண்ணை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் மனநலம் குன்றிய கருப்பினப் பெண் ஒருவர் சிறுவிபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த போலீசார் அந்த பெண்ணை இழுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் தன்னை பிடித்திருந்த போலீசாரைத் தாக்கினார். இதனைக் கண்ட மற்றொரு காவல்துறை அதிகாரி அந்த பெண்ணின் முகத்தில் குத்தினார். இதனால் நிலைகுலைந்த அந்த பெண் கீழே விழுந்தார். இதில் அந்த பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டன. ஏற்கெனவே மின்னிசோட்டா பகுதியில் கருப்பின இளைஞரை போலீசார் மிதித்துக் கொன்றதால், அமெரிக்கா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் மற்றொரு சம்பவம் இதுபோன்ற நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.